Thursday, January 5, 2017

இலங்கை அணி படுதோல்வி: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

கேப்டவுனில் நடந்த 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 282 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உள்ளது.
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதிய 2வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா எல்கர் (129), டி காக் (101) ஆகியோரின் சதத்தால் 392 ஓட்டங்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் லஹிரு குமார 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 110 ஓட்டங்களில் சுருண்டது. பிளாந்தர், ரபாடா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பின்னர் 282 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுக்கு 224 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. எல்கர் (55) அரைசதமும், டுபிளசி 41 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் லக்மல் 4 விக்கெட்டும், குமார, ஹெராத் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 507 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
நேற்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 130 ஓட்டங்களை எடுத்திருந்தது. மேத்யூஸ் (29), சந்திமால் (28) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை 224 ஓட்டங்களில் சுருண்டது.
இதனால் தென்ஆப்பிரிக்க அணி 282 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது,
அதிகபட்சமாக அணித்தலைவர் மேத்யூஸ் 49 ஓட்டங்களையும், ஹெராத் 35 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில், ரபாடா 6 விக்கெட்டுகளையும், பிளாந்தர் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.





வீடு துர்நாற்றமின்றி சுத்தமாக இருக்க அருமையான வழிகள் இதோ!

நம் அனைவருக்கும் நிறைவான மன அமைதியை கொடுக்கும் நமது வீட்டை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.
எனவே அன்றாடம் நமது வீட்டை சுத்தம் செய்து துர்நாற்றம் வீசாமல் பராமரிப்பது எப்படி என்பதற்கான வழிமுறைகளை தெரிந்துக் கொள்வோம்.
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாட இரவில் பின்பற்ற வேண்டியவைகள்
  • நாம் தினமும் இரவில், உணவு சமைத்த பாத்திரங்கள் மற்றும் சாப்பிட்ட தட்டுகளை நன்றாக கழுவி, பாத்திரம் கழுவும் இடத்தில் எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் கலந்த கலவையால் சுத்தம் செய்துவிட வேண்டும்.
  • தினமும் உணவுகள் சமைக்கும் அடுப்பை சுத்தம் செய்து, அடுப்பில் வினிகர் மற்றும் உப்பு கலந்த கலவையை தெளித்து, சோப்பு பயன்படுத்தி தேய்த்து, பின் ஈரத்துணியால் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் அடுப்பில் எண்ணெய் பசை இல்லாமல் புதிது போன்று இருக்கும்.
  • நம் வீட்டுல் தரையில் பயன்படுத்தும் விரிப்புகளை ஒவ்வொரு நாளின் இறுதியிலும், கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதனால் வீட்டினுள் தூசிகள் தங்கி, அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  • நாம் அன்றாடம் தூங்கும் படுக்கையை தினமும் நன்றாக தட்டி தூசுகளை நீக்கி விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • காலணிகள் வைக்கும் இடம் மற்றும் காலணிகளை தினமும் சுத்தம் செய்து விட்டு பின் அந்த இடத்தில் காலணிகளை வைக்க வேண்டும்.
  • நமது வீட்டின் கழிவறைகளை இரவில் தூங்க செல்லும் முன், ஒரு வாளி தண்ணீரை விட்டு, நன்றாக ழுவி விட வேண்டும். பின் கழிவறையின் ஜன்னல் அறையைத் திறந்து வைக்க வேண்டும். இதனால் கழிவறையில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.

Wednesday, January 4, 2017

முரளிதரனுக்கு பிறகு மிரட்டி வரும் ஹெராத்: இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா

Image result for rangana herathமுத்தையா முரளிதரனுக்கு பிறகு இலங்கை அணியின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரங்கனா ஹெராத் பெற்றுள்ளார்.
இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 392 ஓட்டங்களும், அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்பிரிக்கா அணி 35 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடி வருகிறது.
தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 317 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது. இதனால் மிகப்பெரிய இலக்கை இலங்கை அணிக்கு தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் , இலங்கை அணி சற்று நிதானத்துடனே ஆடும் என்று கருதப்படுகிறது.
மேலும் இலங்கை அணியின் வெற்றிகரமான சுழற்பந்து விச்சாளராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். இவர் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி, இலங்கை அணியில் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் விழ்த்தியவர்களில் முதல் இடத்தில் உள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக முன்னாள் வீரரான வேகப்பந்து வீச்சாளர் சமீந்த வாஸ் உள்ளார். இவர் 355 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் இன்று தென் ஆப்பிரிக்கா வீரர் கெய்ல் அபாட்டை வீழ்த்தியதன் மூலம் சமீந்த வாசை பின்னுக்குத் தள்ளி 356 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
முத்தையா முரளிதரனுக்கு பிறகு 38 வயதான ரங்கனா ஹெராத் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார் பிரதமர்

Image result for ranil vikrama singhஇலங்கையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனவரி 8ஆம் திகதியளவில் நாடளாவிய ரீதியில் பல வேலைத் திட்டங்களை அமல்படுத்தவுள்ளதாகவும், அதன்படி சுமார் இருபதாயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டியவில் வாகன உற்பத்திச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த 20,000 வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கையில் நாம் திருப்திப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கவே நாம் விரும்புகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2020ஆம் ஆண்டு இலங்கை முழுதாக வறுமையிலிருந்து விடுபடும் நாடாக மாற்றமடையும் என்று பிரதமரும் ஜனாதிபதியும் தெரிவித்திருக்கும் நிலையில், இளைஞர் யுவதிகளுக்கு பிரதமர் கொடுத்துள்ள இந்த செய்தி முதல்படியாக காணப்படுகின்றது.
அண்மையில் “இலங்கையில் இனி அடிப்படைச் சம்பளம் ஆகக் குறைந்த சம்பளம் 40 ஆயிரமாகக் காணப்பட வேண்டும் என்பதே எமது இலக்காகும்” என்று பிரதமர் தெரிவித்திருந்த கருத்து அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் ஆகும்.

இது ஆண்களுக்கு மட்டும்! கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்


Image result for இது ஆண்களுக்கு மட்டும்
ஆண் மற்றும் பெண்களின் உடம்பில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்புத் தன்மையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும்.

இதனால் சில நோய்களின் தாக்கங்கள் கூட ஆண், பெண் பாலினங்களில் வேறுபடுகின்றது.

எனவே பெண்களை விட ஆண்களின் உடல் நலத்தை அதிகமாக பாதிக்கும் நோய்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஆண்களை அதிகமாக பாதிக்கும் நோய்கள்

ஆண்களை அதிகமாக பாதிக்கும் அல்சைமர் நோயானது, அவர்களின் 60 வயதிற்கு பின் தாக்குகிறது. இந்த நோயானது, ஒவ்வொரு நாளும் அதிகமான ஞாபக மறதியை ஏற்படுத்தும். மேலும் இந்த அல்சைமர் நோய் ஏற்பட்டதை உணர்ந்து, தக்க சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவது நல்லது.
ஆண்களுக்கு வயது அதிகமாகும் போது, அவர்களின் உடம்பில் பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரானும் குறையும். இதனால் உடலுறவில் அதிகமான நாட்டமின்மை, இருப்பதால், அதிகமாக உணர்ச்சிவசப்படும் பிரச்சனைகள் ஏற்படும்.
ஆண்களைத் தாக்கும் மிக முக்கிய நோய்களில் இதயநோயும் ஒன்றாகும். இன்றைய காலத்தில் இருக்கும் ஆண்களுக்கு அவர்களின் 40 வயதிலேயே இதய பிரச்சனைகள் தாக்குகின்றது. இதற்கு அவர்களின் மன அழுத்தம், உடல் பருமன் போன்றவை தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றது.
ஆண்களை அதிகம் தாக்கும் புற்று நோய்களின் வகைகளில், புரோஸ்டேட் புற்று நோய் தான் அவர்களை அதிகமாக தாக்குகின்றது. இதனால் அவர்களின் புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டு சிறுநீர் கழிப்பதில் வலிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
ஆண்களுக்கு டைப்- 2 சர்க்கரை வியாதி அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றது. இதனால் அவர்களுக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்ற நோய் ஏற்பட்டு, கண்பார்வை இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆண்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய பாதிப்பு மன அழுத்தம் ஆகும். அதிகமான மன அழுத்தம் காரணமாக நிறைய ஆண்க:ளுக்கு தூக்கமின்மை, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

டூத்பேஸ்டில் இந்த கலருக்கான அர்த்தம் தெரியுமா?


ஆதிகாலத்தில் வேப்பங்குச்சியில் பல் துலக்கிய மனிதர்கள் பின்னர் கண்டுபிடித்தது தான் டூத் பேஸ்ட்!
ஆரம்பத்தில் சில நிறுவனங்கள் மட்டுமே இதன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தன. தற்போது மக்கள் அதிகம் டூத் பேஸ்டை பயன்படுதுவதால் அதை தயாரிக்கும் நிறுவனங்களும் அதிகரித்து விட்டது.
’உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா’ போன்ற டூத் பேஸ்ட்க்கென்றே மக்களை கவர பல விளம்பரங்கள் இன்று வர ஆரம்பித்து விட்டது.
எல்லா டூத் பேஸ்ட்களும் இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கபடுவதில்லை.
டூத் பேஸ்டின் பின் பக்கம் பட்டையாக இருக்கும் கலர் கோடுகளை வைத்து அதன் கலவை என்ன என்பதை கண்டுபிடித்து விட முடியும்.
நீல நிறம் - இதில் மருத்துவதன்மையும், இயற்கை பொருளும் கலந்துள்ளது
பச்சை நிறம் - இயற்கை பொருட்கள் கலந்துள்ளது
சிவப்பு நிறம் - இயற்கை ரசாயன கலவை இதில் உள்ளது
கருப்பு நிறம் - சுத்தமான ரசாயன கலவை.

உங்கள் வீட்டில் மின்சார கட்டணம் அதிகமா? கவலைய விடுங்க குறைக்க சிறந்த வழி!



Image result for மின்சார கட்டணம்
வீட்டில் மின்சாரத்தை எதற்காக பயன்படுத்துகிறீர்கள்? எனக் கேட்டால் எல்லாரும் இலகுவாக கூறிவிடுவார்கள்.
ஆனால் வீட்டில் மின்சாரத்தை எதற்காக வீண்விரயம் செய்கிறீர்கள்? என்று கேட்டால் அனைவரும் வாயடைத்துப் போய்விடுவார்கள்.
ஆனால் இவை குறித்து நீங்கள் அறிந்து வைத்திருத்தல் கட்டாயம். காரணம் இவ்வாறு வீணாக்கப்படும் மின்சாரமானது எதிர்காலத்தில் மின்சாரத்தை இல்லாமல் ஆக்கிவிடக் கூடும்.
சில நேரங்களில் அநாவசியமாக மின்விசிறிகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை எம்மால் காணக்கூடியதாயிருக்கும்.
அது மாத்திரமா மின்விளக்குகள் பகல் நேரங்களில் நன்கு வெளிச்சமுள்ள இடங்களில் கூட ஒளிர்ந்து கொண்டிருக்கும் மற்றும் கைத்தொலைபேசிகள் நீக்கப்பட்ட பின்னும் கூட சார்ஜர் மின் வழங்களுடன் தொடர்பில் இருக்கும்.
அது போன்றே குளிர்சாதனப்பெட்டிகளை அடிக்கடி திறந்து மூடல் அல்லது குளிர்சாதனப்பெட்டியை திறந்து விட்டு மூடாமல் செல்வது போன்ற பல்வேறு விடயங்களால் மின்சாரம் விரயமாக்கப்படுகிறது.
மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சில…………
Image result for மின்விசிறி
* மின்விசிறி – மின்விசிறிகளை தெரிவுசெய்யும் போது குறைந்த எடையுடைய மற்றும் மின் திறன்மிக்க மின்விசிறிகளை தெரிவுசெய்தல் நன்று. மின்விசிறி பிளேடுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவசியமற்ற நேரங்களில் மின்விசிறிகளை நிறுத்திவைத்துவிட்டு செல்ல வேண்டும். இதன் மூலம் அதிகளவிலான மின்சாரத்தை சேமித்துக்கொள்ள முடியும்.
Image result for கிரைண்டர்
* கிரைன்டர் – மின்திறன் மிக்க மோட்டார்களை இணைப்பதன் மூலம் மின்விரயத்தை குறைக்க முடியும். கிரைன்டர்களை எப்போதும் அதன் முழுதிறனுக்கே உபயோகித்தல் சிறந்தது.
Image result for வாஷிங் மெசின்
* வாஷிங் மெசின் – எப்பொழுதுமே அதன் முழுதிறனுக்கே செயற்படுத்திக் கொள்ள வேண்டும். வாஷிங் மெசினில் உள்ள டிரையரை பயன்படுத்துவதை தவிர்த்து சூரியஒளியில் உடைகளை காயவைப்பது நல்லது. மழைக்காலங்களில் மாத்திரம் டிரையரை உபயோகிப்பது சிறந்தது.
Image result for ஹீட்டர்
* ஹீட்டர் – வெப்ப இழப்பினைத் தவிர்த்திட சுடுநீர் செல்லும் குழாய்களுக்கு தகுந்த வெப்ப பாதுகாப்பு உறை அமைக்கப்பட வேண்டும். குழாயின் இணைப்புகளில் நீர் கசிவுகள் ஏதேனும் உள்ளதா என அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.
Related image
* கணினி – பயன்படுத்தப்படாது உள்ள போது நிறுத்தி வைக்க வேண்டும். 24 மணி நேரமும் ஒரு கணினி செயல்படுமாயின் அக்கணினி மிக அதிகளவு மின்சாரத்தை வீணடிக்கிறது. தேவையான போது மட்டும் கணினியை இயக்குவதும் மற்றும் பயன்பாடு இல்லாத போது இயக்கத்தை நிறுத்தி வைத்து பயன்படுத்தும் போது மின்சக்தி சேமிக்கப்படுவது மட்டுமல்லாமல் கணினியையும் நீண்ட நாள் பாவிக்கவும் முடியும்.
Image result for iron
* மின்னழுத்தி – தேவையான துணியனைத்தையும் ஒரே நேரத்தில் “அயர்ன்” செய்வது சிறந்தது. வேலை முடிந்ததும் மின்னழுத்தியை தொடுப்பகற்றி வைத்தல் வேண்டும்.
Image result for குளிர்சாதனப்பெட்டி
* குளிர்சாதனப்பெட்டி – குளிர்சாதனப்பெட்டியின் பாவனைக்கு 12 சதவீத மின்னாற்றல் தேவைப்படுகிறது. குளிர்சாதனப்பெட்டிக்கும் சுவருக்கும் இடையே போதியளவு இடைவெளி இருப்பது அவசியமாகும். நொடிக்கொருமுறை குளிர்சாதனப்பெட்டியை திறந்து மூடுவதன் அதிகளவான மின் விரயமாக்கப்படுகிறது.
Image result for Electric heater
* மின்னடுப்பு – இவ்வகையான அடுப்புகளில் தட்டையான அடியை கொண்ட பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் சக்தியை விரயமின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Image result for மின்விளக்கு
* மின்விளக்குகள் – சி.எப்.எல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். சி.எப்.எல் விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் மின் பாவனையை குறைக்க முடியும்.
* குளிரூட்டிகள் – குளிரூட்டிகள் பயன்படுத்தப்படும் அறைகள் சிறு இடைவெளியும் இன்றி முழுதாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட குளிரூட்டிகள் ஒரு அறையில் இருக்குமானால் அனைத்து குளிரூட்டிகளையும் ஒரே அளவில் பேணுவது சிறந்தது.
Image result for தொலைக்காட்சிபெட்டி
* தொலைக்காட்சிபெட்டி – தொலைக்காட்சியின் அளவிற்கு ஏற்ப மின்சார செலவு மாற்றமடையும். தொலைக்காட்சி பார்த்து கொண்டிருப்பவர்கள் செல்வதானால் தொலைக்காட்சியை தொடுப்பகற்றி விட்டு செல்ல வேண்டும். தொலைகாட்சியின் ஆளியை நொடிக்கொரு முறை ஆன் செய்வதும் ஆப் செய்வதும் கூடாது.
வீட்டில் மின்சாரம் சேமிக்கப்படுவதன் மூலம் சூழல் பாதுகாக்கப்படுகிறது. அது எப்படி சாத்தியமாகும்? வீட்டில் மின்சார பாவனைக்கும் சூழல் பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்ற யோசனை தவறு.
ஒரு வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப்படும் போது சாதாரண கார்கள் பயன்படுத்தும் போது, வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டை விட அதிகளவான காபனீரொட்சைட்டு வெளிவிடப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சூரியகலங்களை உபயோகிப்பதன் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதனால் மின்சாரத்தின் மூலம் விரயமாகும் பணத்தினை குறைத்துக்கொள்ள முடியும்.
எனவே மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் உங்களுக்கு தெரியாமலே பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

அணி தலைவர் பொறுப்பில் இருந்து டோனி திடீர் விலகல்

Image result for ms dhoniஇந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபது20 கிரிக்கெட் போட்டிகளுக்கான  அணி தலைவர் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

டோனி அணி தலைவர் பொறுப்பிலிருந்து  விலகுவதாக டோனி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தரப்பிலும் குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிக்கான தேர்வில் டோனி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டோனி அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதை தொடர்ந்து விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளுக்கும் அணி தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.