Wednesday, April 11, 2018

கண்டி திகன இனக்கலவரம் தொடர்பான தகவல்

 கண்டி திகன இனக்கலவரம் தொடர்பான தகவல்
______________________________

கண்டி திகண இனக்கலவரம் தொடர்பான தவல்களை முடியுமானவர்கள் வரும் 21 ம் திகதிக்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி பிராந்திய  காரியாலயத்திற்கு பதிவுத்தபால்களில் அனுப்ப முடியும்.
Tamil daily mirror


Monday, April 9, 2018

செல்பியால் விளைந்த விபரீதம்!!!

செல்பியால் விளைந்த விபரீதம்!!!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மலை பகுதியில் பிரசித்தி பெற்ற மானசா தேவி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற இளைஞர் 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.



குறித்த இளைஞர் மலையில் சென்று கொண்டிருந்த போது  ஒரு கட்டத்தில் செல்பி எடுக்க முடிவு செய்து ஒரு பள்ளத்தின் விழும்பில் நின்று கொண்டு செல்பி எடுத்த போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி சுமார் 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து  உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் உடனடியாக செயல்பட்டு இளைஞரை  பள்ளத்தில் இருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 





Sunday, April 8, 2018

சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவிடம் அதிகாரம் சென்று விடக் கூடாது என்பதில் ஹரீஸ் அக்கறை காட்டினார்!

கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பது மற்றும் மேயர் விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எச்.எம் ஹரீஸ் அவர்கள் நேற்று (07) என்னிடம் தெரிவித்த கருத்துகளை நான் எனது முகநூலில் பதிவிட்டிருந்தேன்.

பிரதியமைச்சர்  வெளியிட்ட தனது  கருத்தில் ‘ அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அன்சில் கூட எனது பக்க நியாயத்தைப் புரிந்து கொண்டதுடன் எனது பக்கம் பிழை இல்லை என்றும் என்னிடம் தெரிவித்தார்.’  எனக் கூறியிருந்தார்.  ஆனால், இந்தக் கூற்றை   அன்சில் அவர்கள்  முற்றாக  நிராகரித்து தனது மறுப்பை வெளியிட்டுள்ளார்.




அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அன்சில் அவர்கள் எனக்கு இன்று (08) தெரிவித்த தன்னிலை விளக்கத்தை இங்கே பதிவிடுகிறேன்.

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

1.பிரதியமைச்சர் ஹாரிஸ் அவர்கள் தன்னை ஒரு சமூக அக்கறை கொண்டவராக காட்டவே முயற்சித்தார்.

2.சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு அதிகாரம் சென்று விடக் கூடாது என்பதில்  ஹரீஸ் அக்கறை காட்டினார்.

3.ரிஷாத் பதியுதீன் விட்டுக் கொடுப்புடன் இந்த விடயத்தில் நடந்து கொண்டார்.

4.சாய்ந்தமருது சுயேட்சைக் குழு ஆட்சியமைக்க விரும்பினாலும் நாம் இருவரும் விட்டுக் கொடுப்போம். இதில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைந்தது, மக்கள் காங்கிரஸ் வெற்றியடைந்தது என்ற கதை எமக்குத் தேவை இல்லை. அவர்களையே ஆட்சிமையக்கக் கொடுப்போம் என்று அமைச்சர் ரிஷாத் கூறிய போது அதற்கு ஹரீஸ் வேறு ஒரு கதையைக் கூறினார்.

5  மேயர், பிரதி மேயர் விவகாரத்தில் ஹக்கீமுக்கும் ஹரீஸுக்கும் ஒத்த கருத்தில்லை.

tamil daily mirror

Wednesday, April 4, 2018

முழு முஸ்லிம் சமூகமும் இன்று முகத்தை மூடி வெட்கித்து நிற்கிறது!

கடந்த சில நாட்களாகவே எனக்குள் ஓர் ஆச்சரியம் முளைவிட்டுக்  கிளை பரப்பிக்  கொண்டிருந்தது.( tamil daily mirror )




ரணில் தாசனான ரவூப் ஹக்கீம் திடீரென ரணிலுக்கெதிராக அறிக்கைகளை அள்ளி வீசுகிறார், என்ன காரணமாக இருக்குமென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.( tamil daily mirror )


 _ரணில் முதுகில் குத்திவிட்டார்...
_ரணில் கழுத்தறுத்துவிட்டார்...
_ரணில் துரோகம் செய்துவிட்டார்...
_ரணில் ஏமாற்றிவிட்டார்....


என்றெல்லாம் புது மாப்பிள்ளையைப் பறி கொடுத்த பொண்டாட்டி போல ஹக்கீம் புலம்பிக் கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்னவாக இருக்குமென்று கண்டுபிடிக்க உண்மையிலேயே  போராடிக் கொண்டிருந்தேன்.( tamil daily mirror )

ரணிலே வேண்டாமென்று விரட்டியடித்தாலும் விட்டுப் போகாத ஹக்கீமா ரணிலுக்கெதிராகப் பேசுகிறார்...? இதில் ஏதோ ஒரு பெரும் மர்மம் இருப்பது போலவே எனது உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருந்தது.( tamil daily mirror )

அட...எனது ஆச்சரியமும் யோசனையும் குழப்பங்களும் இவ்வளவு விரைவில் தீருமென நான் நினைத்திருக்கவே இல்லை.( tamil daily mirror )

மொத்தமாக  5250 மில்லியன் ரூபாய்கள் பணத்தை ரணிலிடம் கறந்து எடுப்பதற்காகத்தான் ஹக்கீம் இவ்வளவு பெரிய, அசிங்கமான, வஞ்சகத்தனமான, கேவலமான  நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றார் என்று எனக்கு இன்று புரிந்து போனது.( tamil daily mirror )

ஒரு முன்னாள் அமைச்சரின் மகன் சமூக வலைத்தளத்தில் இதுபற்றி பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். போதாக்குறைக்கு ஒரு முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பாராளுமன்றத்திலேயே ஹக்கீமின் நரித்தனத்தை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். அது பாராளுமன்ற ஹன்சார்ட்டிலும் பதிவாகியிருக்கும்.( tamil daily mirror )

ஹக்கீம் பணம் வாங்கியது பற்றி ரகித ராஜபக்ஷவின் பதிவின் கீழே சிங்கள மக்கள் ஹக்கீமைக் காரித் துப்பிக் கொண்டிருக்கிறார்கள். ( tamil daily mirror )

முழு முஸ்லிம் சமூகமும் இன்று முகத்தை மூடி வெட்கித்து நிற்கிறது!

( tamil daily mirror )

மாவடிப்பள்ளி கிராம பிதா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கெளரவ MNM றணீஸ் அவர்களின் அழைப்பின்பேரில் காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளர் அவர்கள் நேற்று (03) எமது மாவடிப்பள்ளி மண்ணிற்கு வருகை தந்தார் இதில் மாளிகைக்காட்டிற்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் கெளரவ இஸ்மாயில் அவர்களும் கலந்து கொண்டார்


எமது கிராம பிதா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கெளரவ MNM றணீஸ் அவர்களின் அழைப்பின்பேரில் காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளர் அவர்கள் நேற்று (03) எமது மாவடிப்பள்ளி மண்ணிற்கு வருகை தந்தார் இதில் மாளிகைக்காட்டிற்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் கெளரவ இஸ்மாயில் அவர்களும் கலந்து கொண்டார்.





இவர்கள் எமது பிரதேசத்திலுள்ள முக்கியமான இடங்களை பார்வையிட்டனர் குறிப்பாக எமது நூலகத்திற்கு சென்று அங்குள்ள நிலவரங்களை கேட்டறிந்து அதற்கு தற்போது தேவையாக உள்ள புதிய பாடத்திட்டத்திற்கான நூல்கள் இல்லாத நிலையில் அத்தேவையினையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்




அதன் பின்னர் எமது கிராமத்தில் அமைந்துள்ள #மன்புல்ஹிதாயாஅரபிக்கல்லூரியை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையாக உள்ள கட்டிடம் ஒன்றையும் அதற்கான நீரிணைப்பையும் எனது கட்சியினூடாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என எமது உறுப்பினர் அவர்களின் நிருவாகத்தினரிடம் உறுதியளித்தார்.





அதனை தொடர்ந்து வவ்வரவை எல்லையில் மையப்படுத்தி அமைந்துள்ளதும் இதுவரைகாலமும் மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தாமலுள்ள வீதியினையும் முதற்கட்டமாக கிரவல் இட்டு அதனை மக்களின் பயன்பாட்பிற்கு விடவும் மற்றும் மத்திய வீதி,வைத்தியசாலை வீதிகளுக்கான நீண்டகால தேவையாகவுள்ள வடிகாண்களை அமைத்துத்தரவும் மின்விளக்குகள் தேவையாகவுள்ள இடங்களில் மின்விளக்குகள் அமைக்கவுள்ளதாகவும் இவ் அனைத்து தேவைகளை உங்கள் பிரதேச சபை உறுப்பினர் றணீஸ் அவர்களின் ஒத்துழைப்புடன் செய்து தர என்னால் முடியும் என்றும் தவிசாளர் உறுதியளித்தார்




வரலாற்றில் முதல் தடவையாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் ஒருவர் எமது மண்ணிற்கு வருகை தந்து எமது உறுப்பினர் அவரின் இல்லத்தில் அவர் ஏற்பாடு செய்த விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது




இதில் மாவடிப்பள்ளி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள், போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பல சமூக நலன்விரும்பிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Tuesday, April 3, 2018

புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரி

ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ

السلام عليكم ورحمة الله وبركاته

( அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு ) 

அல்லாஹ்வின் பேரருளால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கரைப்பற்றுக்கிளையில் இன்று 03/04/2018  ளுஹர் தொழுகையின் போது நான் இஸ்லாத்தினை நேசிக்கிறேன் என்றும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டும், அகிழத்து மக்களின் பொது உடமையான புனித அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பினையும் பெற்றுக் கொண்டு தாய்மார்க்க மாகிய புனித இஸ்லாம் மார்கத்தினை வாழ்க்கை நெறியாகத் தேர்வு செய்து கொண்டார். நரகிலிருந்து பாதுகாத்த அல்லாவுக்கே எல்லாப்புகழும். அந்த சகோதருக்காக பிரார்த்தனை செய்வோம்

Tuesday, March 20, 2018

மஹிந்த வாழ்த்து ; மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட புட்டினுக்கு


ரஷ்யா ஜனாதிபதி தேர்தல் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ள நிலையில் தேர்லில் 76 சதவீத வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்ற விளாடிமிர் புட்டீனுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

TAMIL DAILY MIRROR

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி .பீ.மெதேரியிடம் ரஷ்ய ஜனாதிபதிக்கான தனது வாழ்த்தினை தெரிவித்துள்தோடு, புட்டினது வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும்   மஹிந்த ராஜபக்ஷ  ரஷ்ய தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

TAMIL DAILY MIRROR

இம்முறை இடம்பெற்ற ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் 8 பேர் போட்டியிட்ட நிலையில் போட்டியிட்டவர்களில்  அதிகூடிய வாக்கு வீதத்தினைப் பெற்று புடின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.

TAMIL DAILY MIRROR

இதேவேளை  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புட்டின் 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா ஜனாதிபதி தேர்தல் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ள நிலையில் தேர்லில் 76 சதவீத வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்ற விளாடிமிர் புட்டீனுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

  1. TAMIL DAILY MIRROR

    இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி .பீ.மெதேரியிடம் ரஷ்ய ஜனாதிபதிக்கான தனது வாழ்த்தினை தெரிவித்துள்தோடு, புட்டினது வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும்   மஹிந்த ராஜபக்ஷ  ரஷ்ய தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

    TAMIL DAILY MIRROR

    இம்முறை இடம்பெற்ற ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் 8 பேர் போட்டியிட்ட நிலையில் போட்டியிட்டவர்களில்  அதிகூடிய வாக்கு வீதத்தினைப் பெற்று புடின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.

    இதேவேளை  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புட்டின் 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


    TAMIL DAILY MIRROR

மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட புட்டினுக்கு மஹிந்த வாழ்த்து




ரஷ்யா ஜனாதிபதி தேர்தல் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ள நிலையில் தேர்லில் 76 சதவீத வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்ற விளாடிமிர் புட்டீனுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

TAMIL DAILY MIRROR

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி .பீ.மெதேரியிடம் ரஷ்ய ஜனாதிபதிக்கான தனது வாழ்த்தினை தெரிவித்துள்தோடு, புட்டினது வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும்   மஹிந்த ராஜபக்ஷ  ரஷ்ய தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

TAMIL DAILY MIRROR

இம்முறை இடம்பெற்ற ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் 8 பேர் போட்டியிட்ட நிலையில் போட்டியிட்டவர்களில்  அதிகூடிய வாக்கு வீதத்தினைப் பெற்று புடின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.

TAMIL DAILY MIRROR

இதேவேளை  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புட்டின் 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  1. TAMIL DAILY MIRROR

நான் உடலைக் காட்ட மாட்டேன்; அது கட்டாயமுமில்லை! – ‘கேரளாவின் பலமான பெண்’ விருது வென்ற மஜிஸியா




”தலையில் ஹிஜாப் (முஸ்லீம் பெண்கள் தலையைச் சுற்றிப் போடுகிற முக்காடு) போடுவது, முஸ்லிம் பெண்கள் சாதிப்பதற்கு எந்த வகையிலும் தடையாக இல்லை” என்கிற மஜிஸியா பானுவின் வார்த்தைகளில் ஒரு கோடி நெருப்புத் துண்டங்கள். கேரளாவைச் சார்ந்த பளு தூக்கும் வீராங்கனை மற்றும் பாடி பில்டிங் வீராங்கனையான மஜிஸியா பானுவின் வார்த்தைகளில் ஏன் இத்தனை ரெளத்ரம்? அவரிடமே பேசினோம்.
TAMIL DAILY MIRROR

ஆடை சுதந்திரம் என்பது பெண்களின் அடிப்படை உரிமை. அது உடம்பை வெளிக்காட்டுகிறபடி அணிகிற உடையாக இருந்தாலும் சரி, உடலை முழுக்க மூடி மறைக்கும் உடையாக இருந்தாலும் சரி. ஆடைகள் பெண் சுதந்திரத்தைத் தடை செய்வதே இல்லை; பெண்களின் திறமைகளையும் அவை மறைத்து வைப்பது இல்லை.  நான் என் மதத்தை மதிப்பவள். அதனால் அதன் அடையாளமான ஹிஜாபையும் மதிக்கிறேன், அணிகிறேன். அது எந்த வகையிலும் என் சாதனைகளுக்குத் தடையாக இல்லை. தட்ஸ் ஆல்” என ஹாட் மோடிலிருந்து கூல் மோடுக்கு மாறி புன்னகைக்கிறார்.
TAMIL DAILY MIRROR

பல
ம்


ஸ்போர்ட்ஸில் எத்தனையோ இருக்க, பவர் லிஃப்டிங், பாடி பில்டிங் மீது ஆர்வம் வந்தது எப்படி?

”ஒர்கட்டேரி, கேரளாவின் மிகச் சிறிய கிராமம். நகரங்கள், நவீன நாகரிகம் என்னவென்றே அந்தக் கிராமத்துக்குத் தெரியாது. அதுதான் நான் பிறந்த மண். குழந்தைப் பருவத்திலிருந்தே பாக்ஸிங்கில் ஆர்வம் காட்டுவேன். என் அப்பா அப்துல் மற்றும் அம்மா ரஸியா, என்னை ஏதாவது ஒரு பாக்ஸிங் கோச்சிடம் சேர்த்துவிட நிறைய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கான ஜிம்மே இல்லாத ஊரில், பாக்ஸிங் கோச்சுக்கு எங்கே போவது? வேறு வழியின்றி, என் பள்ளி நாள்களில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்” என்கிறார் மஜிஸியா பானு.
TAMIL DAILY MIRROR

கேரளா


பல வருட தேடுதலுக்குப்பின், மஜிஸியா, தன்னுடைய   மூன்றாவது வருட பல் மருத்துவப் படிப்பின்போதுதான் பாக்ஸிங் வகுப்பில் சேர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களாக மஜிஸியாவின் மனதுக்குள் கனன்றுகொண்டிருந்த பாக்ஸிங் என்கிற தீப்பொறி, அதன் பிறகு பரபரவெனப் பற்றி எரிந்து பல கோப்பைகளையும் மெடல்களையும் இன்றுவரை ருசி பார்த்துக்கொண்டிருக்கிறது.

”பாக்ஸிங் கிளாஸில் சேர்ந்த கொஞ்ச காலத்தில் என் கோச், என்னை பவர் லிஃப்ட்டிங்கில் கவனம் செலுத்தச் சொன்னார். பவர் லிஃப்டிங் கோச்சிங்கில் சேர்ந்த இரண்டே வாரத்தில், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கச் சொன்னார். நானும் பங்கேற்றேன். அந்தப் போட்டியில் என்னுடன் கலந்துகொண்ட சக போட்டியாளர்கள் எல்லாம் பல வருடங்களாக பவர் லிஃப்டிங்கில் டிரெய்ன் ஆனவர்கள். ஆனால், என் ரத்தத்தில் ஊறியிருந்த ஸ்போர்ட்ஸ் வெறி, அந்தப் போட்டியில் என்னை ஒரு வெற்றியாளராக மாற்றியது” என்பவரின் குரலில் டன் கணக்கில் உற்சாகம்.
tamil daily mirror

பெற்றோர்களுடன்



ஆசிய கண்டங்களுக்கான பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மெடல், கொச்சியில் நடந்த கட்டுக்கோப்பான உடலமைப்புகொண்ட பெண்களுக்கான போட்டியில் தங்க மெடல், மூன்று முறை கேரளாவின் பலமான பெண் பட்டம் பெற்றது என ஒட்டுமொத்த கேரளாவையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் மஜிஸியா பானு. இதில் ஆசிய கண்டங்களுக்கிடையேயான பவர் லிஃப்டிங் போட்டியில் மஜிஸியா தூக்கியது 370 கிலோ எடை. பவர் லிஃப்டிங்கில் பயிற்சி எடுத்த மூன்றே வருடத்தில் இது அசுர சாதனை.

பலம்



பவர் லிஃப்டிங் செய்துவந்தவர், பாடி பில்டர்களுக்கான மிஸ்டர். கேரளாவின் பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டது எப்படி?
TAMIL DAILY MIRROR

”அதற்குக் காரணம், என் ஹஸ்பென்ட் நூர் அகமது அலிசே. பாடி பில்டிங்கில் உடம்பின் பாகங்கள் வெளியே தெரியும்படி உடை அணிய வேண்டும் என்பதால், அந்தப் போட்டியில் நான் கலந்துகொள்ள விரும்பியதே இல்லை. ஃபேஸ்புக்கில் பாடி பில்டிங் போட்டிக்கான விளம்பரங்களைப் பார்க்கவே விரும்பாதவள் நான். ஆனால், எல்லாவற்றையுமே என் கணவரின் ஒரு ஃபேஸ்புக் மெசேஜ் மாற்றிவிட்டது. யெஸ், அவர் ஒருநாள், வெளிநாடுகளில் முஸ்லிம் பெண்கள் முழு உடம்பையும் மூடியபடி, ஹிஜாப் போட்டுக்கொண்டும் பாடி பில்டிங் செய்கிற படங்களை இன்பாக்ஸில் அனுப்பியிருந்தார். அவ்வளவுதான்… எனக்கு உற்சாகம் பிய்த்துக்கொண்டது. உடனே மிஸ்டர். கேரளாவின் பெண்களுக்கான பாடி பில்டிங் போட்டிக்கு அப்ளை செய்து கலந்துகொண்டேன். ஆனால், டைட்டில் வின்னராவேன் என்று சத்தியமாக நினைக்கவில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே” முகம் மலர்ந்து சிரிக்கிறார் இந்த டிரெண்ட் செட்டர்.

விகடன்

Tamil daily mirror

உணவு பொருட்கள் வாங்குபவர்களுக்கு அவசர எச்சரிக்கை.!

வவுனியா பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வவுனியா  புகையிரத வீதியில் அமைந்துள்ள அரச வங்கிக்கு அருகேயுள்ள நடமாடும் உணவு விற்பனை நிலையத்தில் மேற்கொண்ட திடீர் தேடுதலின்போது சுகாதாரத்துக்கு கேடான உணவு பொருட்களை மீட்டுள்ளனர்.

TAMIL DAILY MIRROR





 TAMIL DAILY MIRROR

இதன்போது உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரத்துக்கு கேடான உணவுகள் மீட்கப்பட்டதுடன் சுகாதாரத்துக்கு கேடான முறையில் உணவு நிலையத்தை நடத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த காலத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள், எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் சிலர் அவற்றை கவனத்தில் கொள்ளாமல் செயற்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

Monday, March 19, 2018

வாயு கசிவு : 50 பேர் வைத்தியசாலையில்



ஜாஎல - ஏக்கல பகுதியில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை  தொழிற்சலை ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தலைமைத்துவத்தை புதியவருக்கு வழங்குவதற்கு தயார் ; பிரதமர் ரணில் அறிவிப்பு

  (எம்.எம்.மின்ஹாஜ்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் ஏகமனதாகதீர்மானம் எடுக்கப்பட்டது.

TAMIL DAILY MIRROR

அத்துடன் இதன்போது ஐக்கிய தேசியகட்சியின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் கட்சியின் தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்கதயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

TAMIL DAILY MIRROR

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுகூட்டம் அலரிமாளிகையில் இன்று நடைபெற்றது.

TAMIL DAILY MIRROR

இந்த சந்திப்பின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

TAMIL DAILY MIRROR

கூட்டுஎதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது யோசனைகளை முன்வைத்தனர்.

TAMIL DAILY MIRROR

யாழ்ப்பாணம் - அரியாலை - முள்ளிப் பிரதேசத்தில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளார்.



tamil daily mirror

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

tamilv daily mirror

சம்பவத்தில் யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி என்ற 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

tamil daily mirror

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டு உயிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
TAMIL DAILY MIRROR

கொழும்பு : துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..!

கொழும்பு – மெஸேன்ஜர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் காரில் சென்ற இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

TAMIL DAILY MIRROR

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.

இவ்வாறு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் கொழும்பு – தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 42 வயதான அன்டனி ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்தவரின் மனைவி ஆவார்.

TAMIL DAILY MIRROR



சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அருகிலுள்ள சி.சி.டிவி கமரா பதிவை வைத்து துப்பாக்கி பிரயோகம் செய்த நபரின் மோட்டார் வண்டியையும் அதன் இலக்கத்தையும் அடையாளம் கண்டுள்ளனர்.

இதன் படி கறுப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே சிவப்பு நிற காரில் வந்த இருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் சட்டவிரோத ஹெரோயின் விற்பனை என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

TAMIL DAILY MIRROR

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை மற்றும் ஆமர் வீதி பொலிஸார் இணைந்து மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
TAMIL DAILY MIRROR

மாதம்பையில் பதற்றநிலை



TAMIL DAILY MIRROR

சிலாபம் - மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர் (குடிவெறியில்) சிங்கள இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள இளைஞர் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மாதம்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவும்,  திங்கட்கிழமை அதிகாலையும் பதற்றநிலை காணப்படுகிறது.

இதையடுத்து குறித்த பகுதியில் இரு சமூகங்களிடையே ஒருவித பதற்றநிலை உருவாகியுள்ளது. பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TAMIL DAILY MIRROR

சிங்களவர் மீது தாக்குதலை மேற்கொண்ட முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டு, தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

~TAMIL DAILY MIRROR~

Thursday, March 15, 2018

​ஞானசார தேரோவை கைது செய்ய உத்தரவு



ARREST WARRANT
​ 
Tamil Daily Mirror 
இனங்களுக்கிடையே சாதி,மத குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டார் என்று பொதுபலசேனா செயலாளருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு முறையாக சமூகமளிக்காமையின் காரணமாகவே இந்த பிடிவிறாந்து பிறப்பிக்க பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Tamil Daily Mirror

இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கொன்று தொடர்பிலேயே ஞானசார தேரோவை கைது செய்து ஆஜர் படுத்துமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் பொதுபலசேனா செயலாளரும் பங்கேற்றதாக கூறப்படும் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Daily Mirror

கைதுசெய்யுமாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது அர்ஜுன மகேந்திராவை​



ARREST WARRANT
​அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.​

TAMIL DAILY MIRROR
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று இந்த பிடிவிறாந்தை பிறப்பித்துள்ளது

TAMIL DAILY MIRROR 

​இணைய வர்த்தகம் தொடர்பில் புதிய சட்டம்​ ( ONLINE SHOPPING )


TAMIL DAILY MIRROR

இணையத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்களுக்காக புதிய சட்ட கட்டமைப்பு முறை ஒன்றை அறிமுகப்படுத்த நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈ-வர்த்தகம் சம்பந்தமாக இலங்கையில் தற்போதிருக்கின்ற சட்ட முறை பலவீனமானது என்பதுடன் அது சம்பந்தமாக சரியாக செயற்படக் கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்பொன்று இல்லாமை பிரச்சினைக்குறியது என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

TAMIL DAILY MIRROR

இதன்காரணமாக சர்வதேச வர்த்தக மத்திய நிலையத்துடன் இணைந்து ஈ-வர்த்தகம் சம்பந்தமாக புதிய சட்ட கட்டமைப்பு முறை ஒன்றை வகுப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
அரச நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் பங்களிப்புடன் இன்றும் (15) நாளையும் கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது.
தற்போது நாட்டின் சனத்தொகையில் 33 வீதமானோர் இணையப் பயன்பாட்டாளர்கள் என்பதுடன் அதில் அதிகமானவர்கள்25 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAMIL DAILY MIRROR

பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவிற்கான இலங்கை குழாம் அறிவிப்பு



அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள 21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் 13 வகையான போட்டிகளுக்காக இலங்கை சார்பில் 79 வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட 40 அதிகாரிகள் அடங்கலாக மொத்தம் 139 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

1930ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா முதற்தடவையாக நடைபெற்ற போதிலும், 1958ஆம் ஆண்டுதான் இலங்கையிலிருந்து வீரர்கள் இப்போட்டித் தொடரில் முதற்தடவையாக கலந்துகொண்டனர். அன்றிலிருந்து இன்று வரை 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்தமாக 14 பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.


எனினும், 1994ஆம் ஆண்டு கனடாவின் விக்டோரியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் இலங்கை அணி ஒரு தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 16ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமையே இலங்கை அணியின் சிறந்த பெறுபேறாக அமைந்திருந்தது.

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்து சுதந்திரமடைந்த சுமார் 53 நாடுகள் பங்கேற்கும் இவ்விளையாட்டு விழாவானது உலகின் 2ஆவது ஒலிம்பிக் போட்டிகள் என வர்ணிக்கப்படுகின்றது. அத்துடன் ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இவ்விளையாட்டு விழாவின் 21ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காப்பியம் வெளியீட்டு விழா

சென்னையில் 17ஆம் தேதி இஸ்லாமிய இலக்கியக் கழகம் மற்றும் வெள்ளம்ஜி தாவூது பதிப்பகம் சார்பில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பவள விழா மற்றும் அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காப்பியம் வெளியீட்டு விழா 



திருச்சி



சென்னையில் 17ஆம் தேதி இஸ்லாமிய இலக்கியக் கழகம் மற்றும் வெள்ளம்ஜி தாவூது பதிப்பகம் சார்பில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பவள விழா மற்றும் அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காப்பியம் வெளியீட்டு விழாநடைபெறுகிறது.



இஸ்லாமிய இலக்கியக் கழகம் மற்றும் வெள்ளம்ஜி தாவூது பதிப்பகம் சார்பில் இலங்கையைச் சேர்ந்த காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பவள விழா மற்றும் அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் என்ற காப்பிய வெளியீட்டு விழா வருகிற 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை எழும்பூர் வெஸ்டின் பார்க் ஹோட்டலில் நடைபெறுகிறது.இந்த விழாவுக்கு இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர் முனைவர் பேராசிரியர் சேமு. முகமதலி தலைமை வகிக்கிறார். இறை வாழ்த்தை இசையருவி குமரி அபூபக்கர் பாடுகிறார். இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச்செயலாளர்  முனைவர் மு. அப்துல் சமது அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.இஸ்லாமிய இலக்கிய கழக செயலாளர் முனைவர் பேராசிரியர் மு.இ. அகமது மரைக்காயர் வாழ்த்துரை வழங்குகிறார்.


வெள்ளம்ஜி ஜமால் தவூது பதிப்பகம் உரிமையாளர் மற்றும் தோஷிபா எலிவேட்டர்ஸ் மேலாண்மை இயக்குநர் எம்.ஜே. முஹம்மது இக்பால் அறிமுக உரை நிகழ்த்துகிறார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் நூலை வெளியீட்டு வாழ்த்துரை வழங்குகிறார். நூலை முதல் பிரதியை முனைவர் பேராசிரியர் சிலம்பொலி செல்லப்பனார் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்.


மனித நேய கட்சி தலைவர் முனைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் மு.மேத்தா, தேசிய மனித உரிமை அமைப்புகள் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் அ. மார்க்ஸ், அரசியல் விமர்சகர் ஊடகவியலாளர் வீரபாண்டியன், வெள்ளம்ஜி ஜமால் மற்றும் தாவூது அறக்கட்டளை நிர்வாகி வழுத்தூர் எம்.ஜே. அப்துர் ரவூஃப், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாம்தீன், மவ்லவி தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி, சென்னை அடையார் பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி முனைவர் எம். சதீதுத்தீன் பாஜில் பாகவி, மவ்லவி காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி, இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணி கவிஞர் மர்சூம் மௌலானா, இலங்கையைச் சேர்ந்த பொறியாளர் கவிஞர் நியாஸ் ஏ. ஸமத், துபாய்யைச் சேர்ந்த கவிஞர் ஜா. முஹையத்தீன் பாட்ஷா, சிங்கப்பூர் நன்யாங் கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் ப. திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.


இந்ந நூல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகிறார். இறுதியில் அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காப்பிய எழுத்தாளர் காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஏற்புரை வழங்குகிறார்.



இந்த விழாவில் சிறப்பு விருந்தினார்களாக இலங்கை சேர்ந்த புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, புரவலர் அல்ஹாஜ் எம்.ஏ. செய்யிது எம். ஸலாஹுத்தீன், ரஹ்மத் பதிப்பக தலைவர் அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பேராசிரியர் சே.சாதிக், இஸ்லாமிய இலக்கிய கழக நெறியாளர் பேராசிரியர் கேப்டன் என்.ஏ. அமீர் அலி, சீதக்காதி அறக்கட்டளை நிர்வாகி அல்ஹாஜ் வி.என்.ஏ. ஜலால், சென்னை ஆவடி ஏ.எம்.எஸ். பொறியியல் கல்லூரி தாளாளர் அல்ஹாஜ் எஸ்.சேகு ஜமாலுத்தீன், பாபநாசம் ஆர்.டி.பி. கலை அறிவியல் கல்லூரி தாளாளர் அல்ஹாஜ் முனைவர் எம்.ஏ. தாவூது பாட்சா, புரொபஷனல் கூரியர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் எஸ். அஹமது மீரான், எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் கே. நவாஸ் கனி, தமிழ்நாடு முஸ்லிம்  தொண்டு இயக்கத்தின் தலைவர் அல்ஹாஜ் கே.ஏ. மன்சூர், சென்னை எஸ்-ஐஏஎஸ் அகாடமி ஆலோசகர் அல்ஹாஜ் எம். அக்பர்கான், சென்னை அல் அமானத் ஹஜ் சர்வீஸ நிறுவனர் அல்ஹாஜ் எம். மஹ்மூத் மரைக்கார், இலங்கைச் சேர்ந்த சட்டத்தரணி அல்ஹாஜ் எம். முஹம்மது ஃபைஸல், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாளர் ஹாஜி எம்.ஏ. ஜமால் முஹம்மது, இந்திய வெல்ஃபேர் பார்ட்டி மாநில தலைவர் அல்ஹாஜ் எஸ்.என். சிக்கந்தர், மூன் டிவி இயக்குநர் ஷா நவாஸ்கான், ஆவணப் பட இயக்குநர் மற்றும் ஊடகவியலாளர் கோம்பை அன்வர், ஊடகவியலாளர் அஹமது சுபியான், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காப்பிய நுலை பெற்றுக் கொள்கிறார்கள். இறுதியில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொருளாளர் மற்றும் யுனிவர்ஸ் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எஸ்.எஸ். ஷாஜகான் நன்றி கூறுகிறார். விழா ஏற்பாடுகளை இஸ்லாமிய இலக்கியக் கழகம் மற்றும் வெள்ளம்ஜி -தாவூது பதிப்பகம் செய்து வருகிறார்கள்.

வரதட்சணை பற்றி இஸ்லாம்...


இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும். ஆனால், தான் கொடுப்பதற்குப் பதிலாக, தனக்காக எல்லாத் தியாகங்களையும் செய்ய முன் வந்து வாழ்க்கைத் துணைவியாக வரப்போகும் மனைவியிட மிருந்தே வரதட்சணையாக ஒரு பெரும் தொகையையோ, பொருளையோ வாங்குவது தன்மானமில்லா கேவலமான ஒரு விசயமாகும். இந்த அவல நிலையை இன்று நாம் நாட்டில் பரவலாகக் காணும்போது சமுதாயமே வெட்கித் தலைக்குனிய வேண்டியதிருக்கிறது.
Tamil daily mirror

 வரதட்சணைக் கொடுமை இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்  தலைவிரித்தாடுகிறது.

 வரதட்சணை பேசாத திருமணங்களே இல்லை எனும் அளவுக்கு வரதட்சணைப் பேரம் நடைபெற்று வருகிறது.

 வரதட்சணைக்கு எதிராக பலர் குரல் கொடுத்தாலும் வரதட்சணை ஒழிந்த பாடில்லை. இஸ்லாம் வரதட்சணையை வன்மையாகக் கண்டிக்கிறது. அதை வாங்குவோரும். கொடுப்போரும் கடும் தண்டனைக்கு ஆளாகின்றனர் என்பதை குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது.

 வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலை குறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.

மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம்.

 அல்குர்ஆன் (25:37) தனக்கும் பிற குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

 நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள் என கூறுகிறது. அல்குர்ஆன் (42:45) பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு இம்சைப்படுத்தும் மணமகன் வீட்டார் மறுமையில இழிநிலையை எய்துவர் என மேற்கூறிய மறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

 மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும், பாதிக்கப்பட்டோரின் மன வேதனையாலும், பிரார்த்தனையாலும் பல்வேறு சோதனைகளை அடைவர்.

உன்னால் அநீதம் செய்யப்பட்டவனின் (ஏக்கப்பெரு மூச்சால் எழும்) பிரார்த்தனையை பயந்துகொள்.

 இறைவனுக்கும் அவனது பிரார்த்தனைக்குமிடையே திரையேதும் இல்லை என்பது நபிமொழி. மஹர் கொடுத்து மணம் முடியுங்கள் என்ற 4:4 ஆவது இறைக் கட்டளையை மீறிய பாவத்திற்கும் இவர்கள் ஆளாவர்.

 எனவே இலட்சங்களுக்காக பேரம் பேசாமல் இலட்சிய வாழ்வுக்காக போராட வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் மஹர் கொடுத்து தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்குத் துணை புரிவானாக. ஆமீன்.

 இன்றையத் திருமணங்களில் இந்த ஹதீஸில் வரும் எச்சரிக்கையை யாரும் கண்டுகொள்வதே இல்லை

.பெண் வீட்டாருக்கென்று தனிப்பட்ட முறையில் எத்தகைய செலவும் இல்லை. திருமண விருந்து உட்பட அனைத்து செலவுகளையும் மணமகனே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்கால மணமகன்களே! மனைவியாலும் மனைவியின் குடும்பத்தாராலும் உளமார மதிக்கவும் நேசிக்கவும்பட வேண்டுமாயின், இஸ்லாம் வெறுக்கும் வரதட்சணையை ஒவ்வொரு மணமகனும் வெறுத்து, மறுத்து விடுவதுதான் ஒரே வழியாகும்.

இறைமறை (004:034) புகழுந்துரைக்கும் 'ஆளுமையுடைய ஆண்மகனாக'த் திகழ வேண்டுமெனில் இஸ்லாம் வலியுறுத்தும் மணக்கொடையான மஹரை ஏட்டளவில் 101 ரூபாய், 1001 ரூபாய் எனச் சுருக்கி விடாமல், தாராளமாக வழங்கித் திருமணம் செய்வதைக் கொள்கையாகக் கொள்வதுதான் சாலச் சிறந்ததாகும்.

 "மேலும், (மணப்)பெண்களுக்கு (அவர்களின் உரிமையான) மணக்கொடையை மனமுவந்து அளித்து விடுங்கள் ..." (அல்குர்ஆன் 4:4) என்று இறைமறை அறிவுறுத்தும் வார்த்தைகளின்படி தங்கள் வாழ்வின் அடித்தளத்தை ஆண்மகன்கள் அமைத்துக் கொள்ளட்டும்.

தங்கள் இல்லற வாழ்வின் தொடக்கம் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிய மனநிறைவோடு அமைந்து விட்டால், அவனுடைய அருள், வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கிடைத்து வரும்.

அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக யாரோடு போராட வேண்டியிருந்தாலும் தயங்காமல் போராடுவதுதான் உண்மையான முஸ்லிம் ஆண்மகனுக்கான அடையாளம் என்பதை உணர்ந்து மணமகன்கள் இறைகட்டளைக்கு எதிரான வரதட்சணை எனும் கொடுமைக்கு எதிராகப் போராட வேண்டும்!

 அல்லாஹ் வெற்றியைப் போராட்ட வாழ்வின் முனையில் வைத்துள்ளான்.

தங்களின் வருங்கால வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது அறிவுரையை ஒவ்வொரு மணமகனும் கருத்தில் கொள்ள மறந்து விட வேண்டாம்: "

பிறந்த குலம், திரண்ட செல்வம், புற அழகு, மார்க்கப்பற்று(எனும் அகஅழகு) என நான்கு தகுதிகளை அளவுகோலாகக் கொண்டு, ஒரு பெண் (உலக வழக்கில்) மணமுடிக்கப் படுகிறாள்.

நீ மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுத்து ஈடேற்றம் அடைந்து கொள்" (புகாரீ).

 திருமணத்திற்காகக் காத்திருக்கும் அருமைச் சகோதரிகளே! இஸ்லாம் தங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பெண்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்! 'மஹர்' என்பது, ஏட்டளவில் எழுதிவைத்து மணவிலக்குப் பெறும்போது பெண்களுக்குக் கொடுக்கப்படும் சிறு தொகையல்ல என்பதையும் திருமணத்தின்போது மணப்பெண் நிர்ணயித்துக் கேட்கும் மணஉரிமை என்பதையும் பெண்கள் உணர வேண்டும்.

மேலும், இஸ்லாத்தில் பெண்களின் ஒப்புதலின்றி அவர்களை யாரும் மணமுடித்துத் தரமுடியாது. பெருமானாரின் பொன்மொழி்: "கன்னியின் (மௌன) ஒப்புதலும் கன்னி(வயது)கழிந்த பெண்ணின் வாய்மொழி ஒப்புதலும் இன்றி அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது".

பெருமானாரின் இந்தப் பொன்மொழியினை மனதில் ஏந்தி, வரதட்சணை கேட்கும் மணமகனைப் புறந்தள்ளி, இறை கட்டளையை நடைமுறைபடுத்த மணமகள்கள் தயாரானால் இக்கொடிய பாவம் சமுதாயத்திலிருந்து அடியோடு அழிக்கப்படுவது உறுதி.

 தனது வருங்காலக் கணவன், சில இலட்சங்களுக்கும் பல பவுன்களுக்கும் விற்கப்பட்ட கடைச்சரக்காக இருப்பதை எந்தப் பெண்தான் விரும்புவாள்? தனது வருங்காலக் கணவனைத் தேர்ந்தெடுக்கும்போது மணமகள்கள் ஆழ்ந்து சிந்தித்துக் கொள்ளட்டும். மணமகன் பணக்காரனாக இருக்க வேண்டியதில்லை; நல்ல பண்புகளுக்குச் சொந்தக்காரனாக இருந்தால் போதும். அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒப்ப மணமக்கள் வாழ்க்கையைத் தொடங்கித் தொடர்வார்களாயின், கணவன் ஏழையாக இருந்தாலும் "வளங்களை வாரி வழங்கி, அவர்களைச் செழிப்புடன் வாழச் செய்வேன்" என்று அல்லாஹ் (24:32) வாக்களிக்கிறான்.

 மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களே!, திருமணங்களை முன்னின்று நடத்தும் மண உரையாளர்களே! வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் பங்கெடுப்பதில்லை என்று நீங்கள் அனைவரும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக உறுதி எடுக்க வேண்டும். வரதட்சணை என்பது இறைகட்டளைக்கு எதிரான கடும் பாவச்செயல் என்பது, மார்க்க அறிஞர்கள் அறியாத ஒன்றல்ல; எனினும் நினைவூட்டல் என்பது இன்றையச் சமுதாயக் கட்டாயத் தேவைகளில் ஒன்றாகி விட்டது: "... நல்லறங்களிலும் இறையச்சம் நிறைந்த செயற்பாடுகளிலும் நீங்கள் ஒத்துழையுங்கள். மாறாக, பாவங்களிலும் வரம்பு மீறுவதிலும் ஒத்துழைக்காதீர்கள். அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். திண்ணமாக, (குற்றவாளிகளைத்) தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன்" (அல்குர்ஆன் 5:2).

 ஜமாஅத் தலைவர்களே, பொறுப்பாளர்களே! "முடிந்தவரை வாங்கிக் கொண்டு, பள்ளிவாசலுக்குப் பத்து சதவிகிதம் கொடுத்து விடு" என்று பாவமான வரதட்சணையில் பங்கு கேட்பவர்களாக ஜமாஅத் பொறுப்பாளர் இருந்தால் அந்த ஜமாஅத்தின்கீழ் வாழும் மக்கள் எவ்வகையில் செயல்படுவர் என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை. களங்கமான பணத்தைக் கொண்டு, தன் இல்லத்தைப் பராமரிப்பதைக் களங்கங்களுக்கு அப்பாற்பட்ட தூயவனான அல்லாஹ் ஒருபோதும் விரும்ப மாட்டான். ஜமாஅத் பொறுப்பாளர்கள், அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் பொறுப்பு நிறைந்த பதவியில் இருப்பவர்கள் ஆவர். கூடுதல் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கூடுதலான கேள்விகளும் மறுமையில் உள்ளன.

 பெருமானார் (ஸல்) முஸ்லிம்கள் அனைவரையும் எச்சரித்தார்கள்: "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்களுடைய பொறுப்புகள் குறித்து நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள்.

 (மக்கள்)தலைவர் ஒருவர், அவருடைய பொறுப்பின் கீழிருந்த அனைவரையும் குறித்து விசாரிக்கப் படுவார். ஒரு குடும்பத் தலைவன், அவனுடைய குடும்பத்தார் குறித்து விசாரிக்கப் படுவான். ஒரு மனைவி, அவளுடைய கணவனின் உடைமைகளையும் பிள்ளைகளையும் குறித்து விசாரிக்கப் படுவாள். ஒரு (வேலைக்கார)அடிமை, அவனுடைய முதலாளியால் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துகள் குறித்து விசாரிக்கப் படுவான். இவ்வாறாக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்; உங்களுடைய பொறுப்புகள் குறித்து விசாரிக்கப் படுவீர்கள்" (புகாரீ). "

தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தி அமைப்பதில்லை" (அல்குர்ஆன் 13:11)  எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை, அவனுடைய கட்டளைகளுக்கும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டு நிறைவேற்றுவதற்கும் அவரவர் தங்களின் தவறுகளை உணர்ந்து, திருத்திக் கொள்வதற்கும் முன்வந்தால் மட்டுமே சமுதாயத்தில் புரையோடியுள்ள வரதட்சணை என்ற இக்கொடிய அரக்கனை வீழ்த்த இயலும்.

அத்தோடு, தொடர்ந்து வரதட்சணை வாங்கி/கொடுத்து இறை கட்டளையைக் காற்றில் பறக்கவிட்டுக்கொண்டு, வெட்கமோ குற்ற உணர்ச்சியோ கொஞ்சமுமின்றி நடமாடுபவர்களை, அவர்கள் இறைமார்க்கத்திற்கு எதிராக அறைகூவல் விடுபவர்கள் என்ற வகையில் சமுதாயத்திலிருந்து அவர்களைப் புறக்கணிப்பதற்கும் ஜமாஅத், சங்க, இயக்க, அமைப்புகளில் அவர்களை இணைக்காமல், "வரதட்சணை வாங்கி/கொடுப்பவர்களுக்கு இங்கு இடமில்லை" என்ற அறிவிப்பைச் சமூகத்தில் பரவ விட்டு, "பன்றி இறைச்சி உண்பது தீய, பாவச் செயல்" என்ற உணர்வு சமூகத்தில் ஊறிப் போயுள்ள அளவிற்கு, "வரதட்சணை வாங்குதலும் பாவச்செயல்" என்ற எண்ணம் உள்ளத்தில் ஊன்றப் படும் வகையில் ஒவ்வொருவரும் செயல்பட ஆரம்பித்தால் இச்சமுதாயம் இறை உவப்புக்குரிய உன்னத சமுதாயமாக மாற்றம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 அல்லாஹ் அருள்வானாக!
tamil daily mirror

Wednesday, March 14, 2018

கண்டெடுக்கப்பட்ட பர்ஸ் share this link

Tamil daily mirror
சவுதி அரேபியா ரியாத் பத்தா பகுதியில் உள்ள லக்கி உணவகத்தில் நேற்று இந்த நபர் உணவு உண்ட பின் அவரது பர்ஸை தவற விட்டு சென்றுள்ளார்
இந்த பர்ஸானது லக்கி உணவத்தில் பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது
யாருக்கேனும் இந்த ஐடி கார்டில் உள்ள நபரை தெரிந்தால் அவருக்கு தெரியப்படுத்துங்கள்
போட்டோவில் உள்ள இரண்டு கார்டுகளும் இங்கே வசிப்பதற்கு தேவையான முக்கியமான கார்டுகள்
ஒன்று இக்காமா என்று சொல்லப்படக் கூடிய PERMIT CARD
மற்றொன்று அவரது INSURANCE CARD
ஆகவே நண்பர்கள் ந்த போஸ்ட்டையும் பகிருங்கள் ஒரு உதவிக் கரமாய்.
tamil daily mirror

Tuesday, March 13, 2018

பேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.!​​

​​

 2018-03-13
கண்டி சம்பவத்தையடுத்து இன­வாத கருத்துக்கள் வீண் வதந்­திகள் பரவாமலிருக்கும் வகையில் நாட்டின் பாது­காப்பை கருத்திற்கொண்டு அர­சாங்கத்தால் முடக்கப்பட்டிருந்த பேஸ்புக், வட்ஸ்அப் உட்பட சமூக வளைதளங்கள் ​எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை​ முதல் நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
👊
இது குறித்த கலந்துரையாடல் ஒன்று குறித்த நிறுவன அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
🇱🇰
கண்டியில் இடம்பெற்ற வன்­முறை சம்பவங்களையடுத்தே பேஸ்புக் , வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்கள் இலங்கை தொலைதொடர்புகள் மற்றும் ஒழுக்காற்று ஆணைக்­குழு தற்காலிகமாக முடக்கி­யிருந்தது.

 72 மணித்தியால­யங்களுக்கு மட்டுமே இக்கட்­டுப்பாடு என அறிவிக்கப்பட்டி­ருந்த போதிலும் தொடர்ச்சி­யாக இவை முடக்கப்பட்ட நிலை­யிலேயே இருக்கின்றன.

Monday, March 12, 2018

தடை இன்று நீங்குமா..? அல்லது நீடிக்குமா..?

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.
கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­க­ளை­ய­டுத்தே பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலை­த­ளங்களை இலங்கை தொலை­தொ­டர்­புகள் மற்றும் ஒழுக்­காற்று ஆணைக்­குழு தற்­கா­லி­க­மாக முடக்­கி­யி­ருந்­தது. 72 மணித்­தி­யா­ல­யங்­க­ளுக்கு மட்­டுமே இக்­கட்­டுப்­பாடு என அறி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் தொடர்ச்­சி­யாக இவை முடக்­கப்­பட்ட நிலை­யி­லேயே இருக்­கின்­றன.
சமூக வலைத்தளங்கள் கடந்த சனிக்கிழமை முதல் வழமையாக இயங்கும் என ராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்றையதினம் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இந்தவிடயம் குறித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது குறித்த தடையை நீக்குவதா? அல்லது இன்னும் சில தினங்களுக்கு தடையை நீடிப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டிக் கலவரம் களத்தில் நின்று உணர்ந்து கொண்ட நிதர்சனம்.

கண்டிக் கலவரம் களத்தில் நின்று உணர்ந்து கொண்ட நிதர்சனம்.





-சுஐப் எம்.காசிம்-


முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய அடாவடித்தனங்களின் போது, அரசியல் அதிகாரங்களின் ஆழ, அகல பரிமாணங்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இறைவன் நாடியோரின் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இறைவனின் இந்த நாட்டத்தில் நன்மையும் இருக்கும், கெடுதியும் இருக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. உண்மையில் அதிகாரம், அமைச்சுப் பதவிகள் எல்லாமே, அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும், அவர்களது குடும்பமும், அவர்களுக்குக்கு நெருக்கமானவர்களும் சௌகரியமாகவும், சுகபோகமாகவும் வாழவுமே என்பது சிலரது வாதமாக இருந்து வருகின்றது.

இவர்கள் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய விதங்கள், அது பயன்படும் தருணங்கள், அதற்குள் அகப்படும் சக்திகள் பற்றி தெரிந்திருக்கிறார்களோ, இல்லையோ எனக்குத் தெரியாது.
ஆனால், கண்டி மாவட்டத்தில் திகன, கட்டுகஸ்தோட்டை, ஹாரிஸ்பத்துவ கலவரங்களில் நாங்கள் களத்தில் நின்றபோது, “அதிகாரம்” என்றால் என்னவென்று நேரடியாக அறிய முடிந்தது. குறிப்பாக, அதிகாரம் என்பதன் உண்மையான கருத்தியலை என்னால் நிதர்சனமாக உணர்ந்துகொள்ளவும் முடிந்தது.
பொதுவாக அதிகாரங்களை குறிவைத்துள்ளோரும், குறிவைத்து ஏமாந்துள்ளோருமே பதவி விலக வேண்டுமென்ற கோஷங்களை முன்வைத்து, அதற்கு உரமூட்டுபவர்களாகவும் இருந்து வருகின்றனர் என்ற எண்ணம் என்னுள் எழுந்து நிற்கின்றது. தங்களுக்குக் கிடைக்காததை மற்றவர்களும் அனுபவிக்கக் கூடாது என்ற வெறுப்புணர்வின், வெளிப்பாடாக இதனைக் கருதலாமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. எனினும், அவ்வாறான முடிவுக்கும் வரமுடியாத ஒரு பாமரனாக சில வேளைகளில் நான் மாறுவதும் உண்மை.

மருதானை ரயில் நிலையத்துக்கு முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனக்கு அறிமுகமான ஆட்டோ சாரதி ஒருவர் என்னை நோக்கி ஓடிவந்து திகைப்புடனும், வேதனையுடனும் “கண்டி தீப்பற்றி எரிகின்றது. ரிஷாட் சேர் பதவி விலகிட்டார் தானே!” என்று கேட்டார். அவருடைய தவிப்பிலும், கேள்வியிலும் அமைச்சர் ரிஷாட் பதவி விலக வேண்டுமென்ற ஆதங்கம் மேலோங்கி இருந்ததை நான் கண்டுகொண்டேன். “இன்னும் அமைச்சர் பதவி விலகவில்லை” என்று நான் சொன்னால், என்னையும் அந்த சாரதி திட்டிவிடுவாரோ என்று நினைத்து மெதுவாக புன்னகைத்துவிட்டு நகர்ந்தேன். நான் அப்போது சென்றது வீட்டுக்கல்ல. பற்றி எரிந்துகொண்டிருக்கும் கண்டிக்கு அமைச்சரோடு களத்துக்கு செல்வதற்காகவே.

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று படித்தவர்கள் சொல்கின்றனர். பாமரனும் அவர்களை பதவி விலகச் சொல்கின்றான். “என்னடா இது” என்ற எண்ண அலைகள் கண்டிக்கு வந்து சேரும் வரை எனக்குள் ஊழித் தாண்டவமாடின.
கண்டிக்குச் சென்று நான் கண்டதும், உணர்ந்ததும் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் என்றால் பதவி விலகி எதிர்ப்பைக் காட்டுவது போல, அதிகாரத்தோடு களத்தில் நின்று பணியாற்றுவதும் ஒரு காத்திரமான செயற்பாடுதான் என்பதை உணர்த்தின பல.
கும்மியிருந்த காரிருளில் நிசப்தம் நிலவி, வெறிச்சோடிக் கிடந்த வீடுகள், கடைகள், வீதிகள். திகன அக்குரணை, பல்லேகலை, கட்டுகஸ்தோட்டை சந்திகளில் ஆங்காங்கே சந்திக்குச்சந்தி பதுங்கி நின்ற படையினர். எரிந்து சாம்பராகிக் கிடந்த முஸ்லிம்களின் உடைமைகள். 

சேதமாக்கப்பட்டு தகர்ந்து கிடந்த பள்ளிவாசல்கள். இன்னும், எச்சசொச்ச சுவாலைகளுடன் எரிந்துகொண்டிருந்த கட்டிடங்கள். மொத்தத்தில் ஊரடங்கில் உறங்கிக் கிடந்தது கண்டி மாவட்டம். இந்தப் பிரதேசத்தில், ஊரடங்கு வேளையில் அந்த நகருக்குள் ஊடறுத்து எம்மை நுழைய வைத்தது எது? அரசியல் அதிகாரம்தான் அது! என்பதை நான் உணர்ந்துகொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை.

அதிகாரத்தை, பதவியை தூக்கி எறிந்திருந்தால் ஹக்கீமோ, ரிஷாத்தோ, ஹலீமோ, பைசர் முஸ்தபாவோ, இனவாதிகள் இரை தேடிக்கொண்டிருந்த வேட்டைக்களமாய், ரணகளமாய் இருந்த கண்டி மாவட்டத்துக்குள் நுழைந்திருக்க முடியாது என்ற எண்ணம், அதிகாரம் தேவை என்ற கோட்பாட்டுக்கு இன்னும் புள்ளிகள் சேர்த்தன.
மனச்சாட்சியின் பதிவுகளை பற்றிப்பிடித்தவாறு, பற்றி எரியும் அம்பதென்ன, வெலேகட பகுதிக்குச் சென்றோம். அங்கு இனவாதிகளின் தீயிற்கு இரையாகி, முஸ்லிம்களின் மர ஆலைகள் கொழுந்துவிட்டு எரிந்தவாறு இனவாத அனலைக் கக்கிக் கொண்டிருந்தன. இந்த அராஜகத்தை கண்ணுற்று பதைபதைத்துப்போன அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தீயணைப்புப் படையினரை வரவழைத்தார். அதிகாரத் தொனியில் அதட்டியும், மனிதாபிமானத்துடன் கெஞ்சியும் நடந்த காரியம் அது.

கண்டி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு இனவாதிகளின் இந்த அட்டகாசம், களத்தில் நின்ற அமைச்சரினால் கொண்டுவரப்பட்டதும், எரிந்துகொண்டிருந்த மர ஆலைத் தளத்துக்கு பொலிஸாரும் வந்து சேர்ந்தனர். அமைச்சரின் அதிகாரமா இவர்களை வரவழைத்தது? இல்லை இது பிரதி பொலிஸ்மா அதிபரின் மனிதாபிமானத்தால் கிடைத்த உதவியா? என்ற நெருடல்கள் என்னுள் அந்த நேரத்தில் எழாமலில்லை.

இத்தனைக்கும் கண்டிக் கலவரம் நியாயமானதா? இல்லையா? என்பதை நாடே தீர்மானிப்பதற்கு முன்னர், எனக்குள்ளே ஒரு சுயவிவாதம் இடம்பெற்றுக்கொண்டு இருந்ததை, என்னோடு களத்தில் நின்றவர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை.
“என்னடா, இந்த நேரத்தில் வேறொரு பட்டிமன்றம் நடக்கின்றதே” என்று என்னை நானே வெறுத்தவனாய், கட்டுகஸ்தோட்டையில் எரிந்துகொண்டிருந்த முஸ்லிம்களின் மற்றொரு கடைத்தொகுதியை நோக்கி அமைச்சருடன் விரைந்தோம்.

நாங்கள் மட்டுமின்றி அதிகாரம் உள்ள முஸ்லிம் அமைச்சர்களான ஹக்கீமும், ஹலீமும் கண்டிக் கலவரங்களை முடிந்தளவில் கட்டுப்படுத்த, இடத்துக்கு இடம் தொங்கோட்டம் ஓடுவதுபோல் ஓடிக்கொண்டிருந்தனர்.
ஒரு மணித்தியாலத்துக்கு முன்னரே, சுமார் 20 காடையர்கள் வந்து காரியத்தை நிறைவேற்றி விட்டு தப்பிச் சென்றதாக, கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலின் மூன்றாம் மாடியிலிருந்து குதித்து உயிர்பிழைத்த முஅத்தீன், இமாம் உட்பட ஐவர் மூச்சிழுத்துக்கொண்டு பதைபதைத்தனர். இவற்றை எல்லாம் அரச உயர்மட்டத்துக்கும், படைத்தரப்புக்கும் பக்குவமாக அறிவித்து, பலன்பெற வைத்தது அமைச்சர்களுக்குள்ள அதிகாரங்களே! என்பதை அந்தத் தருணம் மீண்டும் உணர்த்தியது.

அரசை விட்டு வெளியேறி எதிர்ப்பைக் காட்டியிருந்தால், அந்தக் குரல்கள் வெறும் கூக்குரல்களாகவே இருந்திருக்கும். இதை ஊடகங்கள் கண்டிருக்காது. உலகம் உற்று நோக்கியிருக்காது. சர்வதேசம் திரும்பிப் பார்த்திருக்காது. அத்துடன் படையினரும் இதை உடனடியாக பொருட்படுத்தியிருக்கவும் மாட்டார்கள்.

மாறாக முஸ்லிம் அடிப்படைவாதிகளின் குரலாக இதற்கு சாயம் பூசி, அதிகாரம் துறந்த அமைச்சர்களையும் அடக்கி வைக்கவே முயற்சிகள் நடந்திருக்கலாம். அந்தளவுக்கு இனவாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றிய கலவரம் இது. பல பேச்சுவார்த்தைகளில் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த கடும்போக்காளர்கள் மற்றும் பௌத்த தேரர்களின் கருத்துக்கள் இவற்றை எமக்குத் தெளிவுபடுத்தின.

இந்த உள்ளார்ந்த விடயங்களைப் பற்றித் தெரியாத, புலத்தின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள சதிவலைகலைப் பற்றி அறிந்திராத சிலரே அதிகாரங்களை தூக்கி எறியுமாறு ஆவேசப்படுகின்றனர்.
அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் எம்.பிக்கள் பதவி விலகினால், அரசாங்கம் கவிழ்ந்துவிடுமா என்ற கணக்கையும் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.
ஓர் இனத்துக்கான பார்வையில், முஸ்லிம் எம்.பிக்கள் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை விலக்கினால் ஏனைய இனங்களின் பார்வையும், வேகமும் எதிர்மாறாக அதிகரிப்பதே இயல்பு. இதற்கான சாத்தியம் அதிகம் உண்டு. எனவே, அரசுக்கு முட்டுக்கொடுக்க வேறு கட்சிகளில் உள்ள எம்.பிக்கள் ஆதரவளிக்கலாம். அவ்வாறு நிகழ்ந்தால் நாட்டாற்றில் விடப்பட்ட நாய்க்கூட்டமாக நேரிடும். எனவே, பதவி துறக்குமாறு கோஷம் இடுபவர்கள், நமது சமூகத்துக்கு கிடைத்த அதிகாரங்களை மேலும் பலப்படுத்த ஏதாவது அரிய முயற்சியை மேற்கொண்டால், அது சிறப்பாக அமையும். ஒட்டுமொத்த சமூகத்துக்கும் நன்மை பயப்பதாகவும் முடியும் என்பதே கண்டிக் கலவரத்தில், அமைச்சர்களுடன் களத்தில் நின்ற என்னால் மேற்கொள்ளப்பட்ட சுய அளவீடாக இருக்கின்றது.  
-இது ஒரு சுயாதீனப் பார்வை-

போடி அருகே குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் பலி மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்கியராஜ் தகவல்

போடி அருகே குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் பலி  மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்கியராஜ் தகவல்


தேனி,

போடி அருகே குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி மலை. இது கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் வருடத்தில் 8 மாதங்கள் மழைப் பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் இங்கு ஏலக்காய், தேயிலை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பசுமைப் போர்வை போர்த்தியது போல காணப்படும் இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்து அமைந்துள்ள இப்பகுதியில் மலை ஏற்ற பயிற்சியும் நடைபெறும்.

நேற்று முன்தினம் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த 24 பேரும், திருப்பூர், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 12 பேர்களும் போடிக்கு வந்தனர். அவர்கள் கொழுக்கு மலையில் சுற்றுலா சென்றனர்.

பின்னர் அங்கிருந்து குரங்கணிக்கு மலை ஏறும் பயிற்சிக்கு சென்றனர். 8 பேராக பிரிந்து 4 குழுக்களாக தனித்தனியாக அவர்கள் பயணம் செய்தனர். நேற்று மாலை மலை ஏற்றத்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்த போது வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது.

இதனால் மலைப்பகுதியில் திரும்பி வந்து கொண்டு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். மேலும் பலர் உயிருக்கு பயந்து கூச்சலிட்டவாறு அலறினர். வனப்பகுதியை விட்டு வெளியே வந்த சிலர் இது குறித்து போடி மற்றும் கொடைக்கானல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். திருப்பூரைச் சேர்ந்த சஜானா (வயது 11), பாவனா (12), ராஜசேகர் (29), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மேகா (8), பிரபு (30), சென்னையைச் சேர்ந்த சகானா (20), பூஜா குப்தா (27), மோனிகா (30) ஆகியோர் காயமின்றி மீட்கப்பட்டனர்.

இந்த குழுவில் இருந்த மேகா என்ற குழந்தையின் தாய் சவிதாவை காணவில்லை. மேலும் மற்ற குழுக்களில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? என தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பற்றி எரிந்த காட்டுத் தீயுடன் புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இரவு முழுவதும் நடந்த தேடுதல் பணியில் சென்னை முடிச்சூரைச் சேர்ந்த விஜயலெட்சுமி, வடபழனியைச் சேர்ந்த ஐ.ஐ.டி. நிறுவன ஆராய்ச்சியாளர் நிவேதா ஆகியோர் மீட்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஈரோடடைச் சேர்ந்த திவ்யா, மோனிஷா, தனபால், ரேணு, பார்கவி, சிவசங்கரி, விஜயலட்சுமி, இலக்கிய சந்திரன், சகானா, சுவேதா, அகிலா, ஜெயஸ்ரீ, லீகா, நிவியா, பிராக்ருதி, நிவேதா, சர்தாஸ்ரீராமன், அனுவித்யா, ஹேமலதா, சுபா, தேவி, பூஜா, மீனா ஜார்ஜ், நிஷா, திவ்யா, அருண், விபின் உள்ளிட்ட 27 பேர் மீட்கப்பட்டனர்.

லேசாக காயமடைந்தவர்களுக்கு போடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் தேனி மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களைத் தவிர 5 பெண்கள் உள்பட 8 பேரை காணவில்லை. அவர்கள் உடல் கருகி இறந்திருக்கலாம் என தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர். ஏனெனில் இரவு முழுவதும் காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிந்து வருவதாலும், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்திருப்பதாலும் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர்.இதனிடையே ஹெலிகாப்டர் மூலம் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நுரை கலந்த தண்ணீரை தெளித்து தீயை அணைக்கும் பணியும் நடந்து வருகிறது.


காட்டுத் தீ குறித்து தகவல் அறிந்ததும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் மற்றவர்களையும் பத்திரமாக மீட்பதாக உறுதியளித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மலை கிராம மக்களும், தன்னார்வலர்களும் நேற்று இரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்கியராஜ் என்பவர் தெரிவிக்கையில், வனப்பகுதியில் சிக்கியவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பணியில் அனைவரும் ஈடுபட்டோம்.

தீயில் கருகியதில் 5 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 15 வயது சிறுவன் என 8 பேரின் உடல்கள் வனப்பகுதியில் உள்ளதை பார்த்தேன். அவர்களின் பெயர் விபரம் தெரிய வில்லை. இது குறித்து மீட்பு படையினரிடம் தெரிவித்துள்ளோம். விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் கேரளா மற்றும் கொடைக்கானல் வனப்பகுதி வழியாக தப்பி இருக்கலாம் என தெரிகிறது. வனப்பகுதியில் எரியும் தீ முழுவதும் அணைக்கப்பட்டால்தான் முழு விபரம் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.


இவர்களில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், வருவாய் அமைச்சர் உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மூவரும் நள்ளிரவு 3 மணி வரை குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தனர். இதன்பின், சுமார் 3.50 மணியளவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குரங்கணி வந்தார்.


அவர் நம்மிடம் பேசும் போது, "கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 3 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்படும். அதில் ஒன்று காட்டுத் தீயை அணைக்கவும், மீதமுள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் பயன்படுத்தப்படும். மீட்கப்பட்ட 27 பேரும்  காயங்கள் அடிப்படையில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில், 6 பேர் தேனி அரசு மருத்துவமனைக்கும், 3 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ளோர் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார்.


வனத்துறையுடன் இணைந்து ஆயுதப்படையின் பயிற்சி காவலர்கள் 150-க்கும் மேற்பட்டோர் மலைகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கோவை விமானப்படை தளத்திலிருந்து கருடா 1, கருடா 2 என்ற பெயரிடப்பட்டுள்ள இரண்டு அணிகள் மீட்புப் பணிக்காக குரங்கணி வந்துள்ளன. இவற்றில் ஓர் அணி மீட்புப் பணிக்காகவும், மற்றொரு அணி மருத்துவ உதவிக்காகவும் வந்துள்ளனர். மேலும், ஒரு ஹெலிகாப்டரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளது. இதனால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

டெல்லியில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்

டெல்லியில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்துதல், வளர்ச்சியில் முன்னேற்றம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆலோசனை

TAMIL DAILY MIRROR

புதுடெல்லி, 


டெல்லியில் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்துதல், வளர்ச்சியில் முன்னேற்றம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இது அண்டை நாட்டுடன் உறவை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என மத்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் குறிப்பிட்டு உள்ளார்.
TAMIL DAILY MIRROR


இதேபோல் வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீது, துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹமீது பின் சையத் பின் அல் நக்யான் ஆகியோருடனும் வர்த்தகம், நிதி, எரிசக்தி, உணவு பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.மேலும் ஐக்கிய அரபு அமீரகம், கயானா, சோமாலியா, மாலி, ருவாண்டா உட்பட ஒட்டுமொத்தமாக 10 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.தில்லிக்கு வந்த சிறீசேனா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார். அப்போது சிறீசேனா தலைமையில் இலங்கை-இந்தியா இடையேயான உறவும், இலங்கை-தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு இடையேயான உறவும், இலங்கை-சர்வதேச நாடுகளுக்கு இடையேயான உறவும் வலுப்பட்டிருப்பதாக ராம்நாத் கோவிந்த் பாராட்டினார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல், பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் சிறீசேனா செயல்படுத்தி வரும் தொலைநோக்கு திட்டத்துக்கும் ராம்நாத் கோவிந்த் தனது பாராட்டை தெரிவித்தார். இந்தத் தகவல் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAMIL DAILY MIRROR

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Sunday, March 11, 2018

பெற்றோல் குண்டு வீசி தாக்கப்பட்ட ஹோட்டலை புனர்நிர்மாணம் செய்து திறந்து வைத்த சிங்கள வர்த்தகர்கள்..!


 .
அதிகாலை எரிக்கப்பட்ட ஹோட்டலை சில சிங்கள நல்லுள்ளம் படைத்த வர்த்தகர்கள் விரைந்து செயற்பட்டு அன்று மாலை பாவனைக்கேற்ற வகையில் திறந்து கொடுத்தமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 .
மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்..!