Tuesday, November 29, 2016

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு





இன்று (30) காலை 8 மணி முதல் நாளை (01) காலை 8 மணி வரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை கண்டிக்கும் வகையில் இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சங்கதின் இணைப்பாளர் டொக்டர் நலிந்த ஹேரத் கூறியுள்ளார்.

ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படவுள்ளமை, அரச ஊழியர்கள் மேலதிகமாக செய்யும் தொழில்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை, இலவச மருத்துவ சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தனியார் துறையினரிடம் வைத்தியசாலைகள் கையளிக்கப்படவுள்ளமை போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகின்ற காலப் பகுதியில் எந்தவொரு நோயாளரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பை எதிர்கொள்வதற்கு தயார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்கு முன்னதாக வைத்திய அதிகாரிகள் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு





இன்று (30) காலை 8 மணி முதல் நாளை (01) காலை 8 மணி வரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை கண்டிக்கும் வகையில் இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சங்கதின் இணைப்பாளர் டொக்டர் நலிந்த ஹேரத் கூறியுள்ளார்.

ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படவுள்ளமை, அரச ஊழியர்கள் மேலதிகமாக செய்யும் தொழில்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை, இலவச மருத்துவ சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தனியார் துறையினரிடம் வைத்தியசாலைகள் கையளிக்கப்படவுள்ளமை போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகின்ற காலப் பகுதியில் எந்தவொரு நோயாளரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பை எதிர்கொள்வதற்கு தயார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்கு முன்னதாக வைத்திய அதிகாரிகள் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

Tuesday, November 22, 2016

ஜப்பானியர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 19 கிலோ தங்கத்தாலான கிறிஸ்துமஸ் மரம் (Video)

ஜப்பானியர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 19 கிலோ தங்கத்தாலான கிறிஸ்துமஸ் மரம் (Video)

ஜப்பானில் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆடம்பர நகைக்கடை ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்க 19 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தங்கத்தை உருக்கி செய்யப்பட்டுள்ள 2 மில்லிமீட்டர் இழைகளைக் கொண்டு 2 மீட்டர் உயரம் உள்ள கிறிஸ்துமஸ் மரம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

அவ்வழியே செல்லும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இந்த மரத்தின் மதிப்பு 26 கோடியே 63 இலட்சம் ஆகும்.

இது குறித்து நகைக்கடை மேலாளர் டகாஹிரோ இடோ பின்வருமாறு தெரிவித்துள்ளார்,


''தற்போது உலக பொருளாதார நிலை சரியில்லை. எனினும், நாங்கள் உருவாக்கியுள்ள தங்கத்தால் செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் தற்போதுள்ள நிலையை மாற்றி ஒளி மிகுந்த வாழ்கையை உருவாக்கும் என நம்புகின்றோம்.


iPhone 6s பேட்டரிகளை இலவசமாக மாற்றித்தர அப்பிள் இணக்கம்

   iPhone 6s பேட்டரிகளை இலவசமாக மாற்றித்தர அப்பிள் இணக்கம்                                                                                                                        சீனாவில் விற்பனை செய்யப்பட்ட iPhone 6s மாடல் பேட்டரிகளில் பிரச்சினை இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, அதனை இலவசமாக மாற்றித்தருவதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் விற்பனையான iPhone 6s வகை செல்பேசிகள் அடிக்கடி off ஆகி விடுவதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டுள்ளனர்.
பேட்டரிகளில் 50 சதவீத சார்ஜ் இருந்தும் இந்த பிரச்சினை எழுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, சீன நுகர்வோர் கூட்டமைப்பு கடந்த வாரம் அப்பிள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியது.
அதில், செல்பேசிகள் தானாக off ஆவதற்கு விளக்கமளிக்கும்படி அப்பிள் நிறுவனத்தை அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், அப்பிள் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தயாரித்து விற்பனை செய்த iPhone 6s செல்பேசிகளின் பேட்டரிகளை இலவசமாக மாற்றித்தருவதாக அறிவித்துள்ளது.
அப்பிள் வாடிக்கையாளர்கள் அங்கீகரிப்பட்ட விநியோகஸ்தர்களை அணுகி பேட்டரிகளை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என அப்பிள் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதர மாடல்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பேட்டரிகளை இலவசமாக மாற்றித் தரும் திட்டம் எதையும் அப்பிள் அறிவிக்கவில்லை.

பந்தை சேதப்படுத்தியதால் டு ப்ளசிஸ்க்கு அபராதம்: முழு ஆட்ட ஊதியத்தையும் இழந்தார்











ஹொபர்ட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தென்னாபிரிக்க அணித்தலைவர் டு ப்ளசிஸ், அவரது முழு ஆட்ட ஊதியத்தையும் அபராதமாக இழந்தார்.

எவ்வாறாயினும், அவர் தொடர்ந்து விளையாட ஐசிசி அனுமதியளித்துள்ளது.

வாயில் சுயிங்கம் அல்லது மிண்ட் மென்று கொண்டிருக்கும் போது, உமிழ்நீரை பந்தின் மீது தடவி பளபளப்பு ஏற்றியதால் அது பந்தின் இயல்பான நிலையை மாற்றியதாகக் குறிப்பிட்டு ஐசிசி அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

இன்று அடிலெய்டில் நீண்டநேரம் இதுபற்றி டு ப்ளசிஸ்ஸிடம் விசாரணை நடந்துள்ளது.

இதன்போது, டு ப்ளசிஸ் செயற்கை பொருளை பந்தின் மீது தடவியது தெரியவந்துள்ளது.
மேலும், கள நடுவர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.

இத்தவறை அவர் முதன்முறையாகச் செய்திருப்பதால், போட்டியிலிருந்து தடை செய்யும் அளவுக்கு இதனை நோக்க முடியாது என்று ஐசிசி கூறியதோடு, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் இதே தவறைச் செய்தால் அவருக்கு ஓரிரு போட்டிகள் தடை விதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

ஆனால், முடிவை எதிர்த்து டு ப்ளசிஸ் மேல்முறையீடு செய்யப்போவதாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

Monday, November 21, 2016

பெஷன் பக் தீ விபத்திற்கான காரணம் என்ன?


பொரலஸ்கமுவ, பெபிலியான சந்தியில் உள்ள பெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக காரணம் தற்போது வரையில் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது வரையில் இடம்பெற்றுள்ள விசாரணைகளின் அடிப்படையில் குறித்த ஆடைக்களஞ்சியத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீப்பரவலுக்கு காரணம் என கூறப்படுகின்றது.

குறித்த தீ விபத்தில் ஆடைக் களஞ்சியத்தின் முதன்மை அலுவலகம் மற்றும் பிரமாண்ட காட்சியறை என்பன தீக்கிரையாகியிருந்தது.

களஞ்சியசாலையில் பரவிய தீ குறித்து, மின் பொறியியலாளர் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர்களது பரிசோதனை அறிக்கைகள் இன்று பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளன.

தீ குறித்த பரிசோதனைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.

தீப்பிடிக்க காரணமாக இருந்தவை குறித்து உயர் தொழில்நுட்பம் முறைமைகளை கொண்டு சோதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

சோதனைகளுக்காக ஆடையக வளாகத்திலுள்ள சிசிரிவி காணொளிகளும் சோதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தீவிபத்தின் காரணமாக 30 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sunday, November 20, 2016

2016 ஆசிய கிண்ணம்! இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!


ஆசிய கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கான ஆசியக் கிண்ணம் 2016 போட்டிகள் தாய்லாந்தில் இம் மாதம் 24 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழாமிலுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் வருமாறு,
ஹசினி பெரேரா ( அணித் தலைவி), பிரஷாதினி வீரக்கொடி ( உப அணித் தலைவி), சாமரி அத்தப்பத்து, சிறிபாலி வீரக்கொடி, சுகந்திகா குமாரி, டினாலி மனோதரா, நிலக்ஷி சில்வா, நிபுனி ஹன்சிஹா, இநோக்கா ரணவீர, ஒசாடி ரணசிங்க, எசானி லொக்குசூரிய,  யசோதா மெண்டிஸ், ஹன்சிமா கருணாரத்ன, அமா காஞ்சனா, உதேசிகா பிரபோதினி ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கையின் அனைத்து ஊழியர்களும் அறிய வேண்டிய சட்டங்கள் !


  1. 2002ம் ஆண்டின் 4ம் இல நிர்வாக மேன்முறையீட்டு நியாயசபைச் சட்டம் 
  2. 2007ம் ஆண்டின் 7ம் இல கம்பனிகள் சட்டம் 
  3. 1984ம் ஆண்டின் 5ம் இல ஊழியர் சபை திருத்தச் சட்டம் 
  4. 1993ம் ஆண்டின் 19ம் இல ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் (விசேட ஏற்பாடுகள்) 
  5. 1979ம் ஆண்டின் 32ம் இல ஊழியர் சபைச் சட்டம் 
  6. 1958ம் ஆண்டின் 15ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் 
  7. 1981ம் ஆண்டின் 26ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (திருத்தியது) 
  8. 1988ம் ஆண்டின் 42ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (திருத்தியது) 
  9. 1985ம் ஆண்டின் 1ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (திருத்தியது) 
  10. 1975ம் ஆண்டின் 6ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (விசேட ஏற்பாடுகள்) 
  11. 1980ம் ஆண்டின் 46ம் இல ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் 
  12. 1982ம் ஆண்டின் 3ம் இல ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் (திருத்தியது) 
  13. 1988ம் ஆண்டின் 42ம் இல ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் (திருத்தியது) 
  14. 1992ம் ஆண்டின் 14ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (திருத்தியது) 
  15. 1993ம் ஆண்டின் 18ம் இல ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் (திருத்தியது) 
  16. 1978ம் ஆண்டின் பயிலுனர் ஊழியர் சட்டம் (தனியார் துறை) 
  17. 1956ம் ஆண்டின் 47ம் இல இளம்பெண்களையும் சிறுவர்களையும் வேலைக்கமர்த்துவது தொடர்பான சட்டம் 
  18. 1984ம் ஆண்டின் 32ம் இல இளம்பெண்களையும் சிறுவர்களையும் வேலைக்கமர்த்துவது தொடர்பானதும், தொழிற்சாலைகள், கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பானதுமான சட்டம் (தொழில் மற்றும் ஊதியம் தொடர்பான தீர்மானங்கள்) 
  19. 2003ம் ஆண்டின் 8ம் இல இளம்பெண்களையும் சிறுவர்களையும் வேலைக்கமர்த்துவது தொடர்பான சட்டம் 
  20. 2006ம் ஆண்டின் 24ம் இல இளம்பெண்களையும் சிறுவர்களையும் வேலைக்கமர்த்துவது தொடர்பான சட்டம் (திருத்தியது) 
  21. 1979ம் ஆண்டின் 61ம் இல அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் 
  22. 1889ம் ஆண்டின் 13ம் இல பெருந்தோட்டத் தொழிலாளர் (இந்தியா) கட்டளைச் சட்டம் 
  23. 1942ம் ஆண்டின் 45ம் இல தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் 
  24. 1998ம் ஆண்டின் 18ம் இல தொழிற்சாலைகள் சட்டம் (திருத்தியது) 
  25. 2000ம் ஆண்டின் 33ம் இல தொழிற்சாலைகள் சட்டம் (திருத்தியது) 
  26. 2002ம் ஆண்டின் 19ம் இல தொழிற்சாலைகள் சட்டம் (திருத்தியது) 
  27. 1996ம் ஆண்டின் 21ம் இல இலங்கை மனித உரிமைகள் சட்டம் 
  28. 1950ம் ஆண்டின் 43ம் இல தொழிற்சாலைகள் பிணக்குகள் சட்டம் 
  29. 1990ம் ஆண்டின் 32ம் இல தொழிற்சாலைகள் பிணக்குகள் சட்டம் (திருத்தியது) 
  30. 199ம் ஆண்டின் 56ம் இல தொழிற்சாலைகள் பிணக்குகள் சட்டம் (திருத்தியது) 
  31. 2003ம் ஆண்டின் 11ம் இல தொழிற்சாலைகள் பிணக்குகள் சட்டம் (திருத்தியது) 
  32. 2003ம் ஆண்டின் 13ம் இல கைத் தொழில் பிணக்குகள் சட்டம் (விசாரணைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாகத் தீர்மானங்களை மேற்கொள்ளும் விசேட ஏற்பாடுகள் 
  33. 2008ம் ஆண்டின் 21ம் இல கைத்தொழில் பிணக்குகள் சட்டம் (திருத்தியது) 
  34. 1939ம் ஆண்டின் 32ம் இல மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம் 
  35. 1981ம் ஆண்டின் 52ம் இல மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம் (திருத்தியது) 
  36. 1985ம் ஆண்டின் 43ம் இல மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம் (திருத்தியது) 
  37. 2003ம் ஆண்டின் 21ம் இல மத்தியஸ்தம் தொடா்பான சட்டம் (விசேட பிணக்குகள்) 
  38. 1992ம் ஆண்டின் 33ம் இல சுரங்கம் மற்றும் கனியுப்புகள் தொடர்பான சட்டம் 
  39. 2006ம் ஆண்டின் 27ம் இல புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபைச் சட்டம் 
  40. 1981ம் ஆண்டின் 17ம் இல நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டம் 
  41. 1991ம் ஆண்டின் 16ம் இல நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டம் (திருத்தியது) 
  42. 1994ம் ஆண்டின் 26ம் இல நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டம் (திருத்தியது) 
  43. 1983ம் ஆண்டின் 12ம் இல பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டம் 
  44. 1983ம் ஆண்டின் 41ம் இல பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டம் (திருத்தியது) 
  45. 1992ம் ஆண்டின் 62ம் இல பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டம் (திருத்தியது) 
  46. 1995ம் ஆண்டின் 22ம் இல தண்டனைக் கோவைச் சட்டம் (திருத்தியது) 
  47. 1998ம் ஆண்டின் 29ம் இல தண்டனைக் கோவைச் சட்டம் (திருத்தியது) 
  48. 2006ம் ஆண்டின் 16ம் இல தண்டனைக் கோவைச் சட்டம் (திருத்தியது) 
  49. 1996ம் ஆண்டின் 28ம் இல வலுவழந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான சட்டம் 
  50. 2003ம் ஆண்டின் 33ம் இல வலுவழந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான சட்டம் (திருத்தியது) 
  51. 1947ம் ஆண்டின் 25ம் இல பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் 
  52. தண்டனைக் கோவை மீதான உரிய திருத்தங்கள் 
  53. 1954ம் ஆண்டின் 19ம் இல கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான சட்டம் (தொழில் வாய்ப்பு மற்றும் வருமானம் தொடர்பான ஒழுங்குகள்) (திருத்தியது) 
  54. 1981ம் ஆண்டின் 53ம் இல கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான சட்டம் (தொழில் வாய்ப்பு மற்றும் வருமானம் தொடர்பான ஒழுங்குகள்) (திருத்தியது) 
  55. 1982ம் ஆண்டின் 36ம் இல கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பானதும் ஊதியச் சபைகள் தொடர்பானதுமான சட்டம் 
  56. 1985ம் ஆண்டின் 44ம் இல கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான சட்டம் (தொழில் வாய்ப்பு மற்றும் வருமானம் தொடர்பான ஒழுங்குகள்) (திருத்தியது) 
  57. 1994ம் ஆண்டின் 4ம் இல இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டம் (திருத்தியது) 
  58. 1985ம் ஆண்டின் 21ம் இல இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டம் 
  59. 1988ம் ஆண்டின் 51ம் இல தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது தொடர்பான சட்டம் (விசேட ஏற்பாடுகள், திருத்தியது) 
  60. 1971ம் ஆண்டின் 45ம் இல தொழிலாளா்களை வேலையிலிருந்து நீக்குதல் தொடர்பான சட்டம் (விசேட ஏற்பாடுகள்) 
  61. 2003ம் ஆண்டின் 12ம் இல தொழிலாளா்களை வேலையிலிருந்து நீக்குதல் தொடர்பான சட்டம் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தியது) 
  62. 2008ம் ஆண்டின் 20ம் இல தொழிலாளா்களை வேலையிலிருந்து நீக்குதல் தொடர்பான சட்டம் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தியது) 
  63. 1970ம் ஆண்டின் 25ம் இல தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சட்டம் (பெருந்தோட்டங்களில் நுழைவதற்கான அனுமதி) 
  64. 1935ம் ஆண்டின் 14ம் இல தொழிற்சங்க கட்டளைச் சட்டம் 
  65. 1941ம் ஆண்டின் 27ம் இல ஊதியச் சபை கட்டளைச் சட்டம் 
  66. 1980ம் ஆண்டின் 10ம் இல ஊதியச் சபைச் சட்டம் (திருத்தியது) 
  67. 1990ம் ஆண்டின் 15ம் இல தொழிலாளர்கள் இழப்பீட்டுத் திருத்தச் சட்டம் 
  68. 2005ம் ஆண்டின் 10ம் இல தொழிலாளர்கள் இழப்பீட்டுத் திருத்தச் சட்டம் 
  69. 1934ம் ஆண்டின் 19ம் இல இல தொழிலாளர்கள் நட்டஈடு தொடர்பான கட்டளைச் சட்டம்

பணத்தை காட்டி பெண்களை வீழ்த்தும் அவலம் : கொடி கட்டி பறக்கும் விபசாரம்





விபசார தொழிலுக்காக பெண்களை மாலைதீவுக்கு அனுப்பும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பிரதான சந்தேக நபர்கள் இரண்டு பேரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு கைதுசெய்துள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை பெண்கள் மாலைதீவுக்கு விபசார தொழிலுக்கு அனுப்பப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவுக்கு பலமுறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதனடிப்படையில் கடந்த ஒரு மாதகாலத்துக்கும் மேல் மேற்கொண்ட தேடுதலில் குறிப்பிட்ட வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பிரதான சந்தேக நபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 2 பேரும் நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் பெண்களை விபாசார தொழிலுக்காக மாலைதீவுக்கு அனுப்பியுள்ளதுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இதுவரை மாலைதீவில் விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது அத்துடன் இந்த பெண்களை மாலைதீவுக்கு அனுப்புவதற்கு முன்னர் பத்தரமுல்லையில் தற்காலிக விடுதியொன்றில் தங்கவைக்கப்படுவதாகவும் விசாரணையின்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட தற்காலிக விடுதியை சுற்றிவளைத்த விசேட விசாரணைப்பிரிவினர் அங்கு தங்கியிருந்த பெண்ணொருவர் மற்றும் அதன் உரிமையாளரை கைதுசெய்துள்ளனர். இதன்போது உரிமையாளரிடமிருந்து மாலைதீவுக்கு விபாசார தொழிலுக்காக அனுப்பிய பெண்களின் புகைப்படங்கள் மற்றும் மாலைதீவுக்கு அனுப்பவிருக்கும் பெண்களின் புகைப்படங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் கடவுச்சீட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பெண்களை சுற்றுலா விசா மூலம் பங்களாதே{க்கு அனுப்பியுள்ளதுடன் அவர்கள் அந்த நாட்டின் பிரபுக்களுக்கு விநியோகிக்கப்படுவதுடன் அந்த பெண்களுக்கு மாதம் ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபா சம்பளமாக வழங்குவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த வியாபாரத்துடன் தொடர்புடைய பங்களாதேஷ் பிரஜையையும் கைதுசெய்வதற்காக விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

'செல்பி'யால் இறந்தவர்களில் முதலிடம் பிடித்த இந்தியா....




வாஷிங்டன் : உலகில் 'செல்பி' எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. எனஅமெரிக்காவைச் சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக. ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.


ஆய்வு : தற்போது நல்ல விஷயம் முதல் துக்க நிகழ்ச்சி வரை செல்பி எடுக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்த பலர் இறந்தும் உள்ளனர். இது குறித்து அமெரிக்கா கார்நிகி மெலன் பல்கலைக்கழக குழுவினர் , செல்பி எடுக்கும்போது இறந்தவர்கள் பற்றிய ஆய்வு நடத்தினர்.



முதலிடத்தில் இந்தியா : இதில் 2014 ஆம் ஆண்டு 15 பேரும், 2015ல் 39 பேரும் 2016ல் 73 பேரும் செல்பி எடுக்கும் போது இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் செல்பி எடுக்கும் போது இறந்தவர்கள் மட்டும் 76 பேர். இதன் மூலம் செல்பி எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது.இதில் பெரும்பான்மையான இறப்புகள், அதிக உயரத்தில் இருந்து செல்பி எடுக்கும்போது, நிலை தடுமாறி கீழே விழும்போது ஏற்பட்டவையாக உள்ளது.

தடுக்க ‛ஆப்' : இந்த ஆய்வு குழுவினர், செல்பி எடுக்கும் போது ஏற்படும் இறப்பை தடுப்பதற்கு ஆப் ஒன்றையும் உருவாக்கி வருகின்றனர். அவர்கள் உருவாக்கும் ஆப்-பின் படி, மிகவும் அபாயகரமான செல்பியை எடுக்கும் போது, அது ஒரு எச்சரிக்கை சமிக்ஞையை கொடுக்குமாம். இதன் மூலம் ஆபத்தான செல்பி எடுக்கும் போது நேரும் இறப்பை தடுக்கலாம் , என அவர்கள் கூறுகின்றனர்.

கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்கள்: ரவிசங்கர் பிரசாத்

புதுடில்லி : ரூபாய் நோட்டு விவகாரத்தில் கெஜ்ரிவால் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெட்கமில்லா பொய்கள் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.



கெஜ்ரிவால் குற்றச்சாட்டு : கறுப்பு பண ஒழிப்புக்காக 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது, பெரு முதலாளிகளுக்கு சாதகம் என்றும், இந்த அறிவிப்பு பா.ஜ., தலைவர்களுக்கு முன்பே தெரியும் எனவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சுமத்தியிருந்தார்.

4 லட்சம் கோடி டெபாசிட் : இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: ரூபாய் நோட்டு விவகாரத்தில் கெஜ்ரிவால் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெட்கமில்லாத பொய்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியான நவ.,8ம் தேதியிலிருந்து, வங்கிகளில் இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய் 500, 1000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரணில் எங்கே..? முஸ்லிம் அமைச்சர்கள் எங்கே...?




பௌத்த இனவாத அமைப்புக்களின் ஊர்வலம் சற்று முன்னர் கண்டி பேராதெனிய கெதம்பே பிரதேசத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்டுள்ளனர்.

பௌத்த பிக்குகள், முதியோர்கள் இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளதை பார்க்கக் கூடியதாக உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் தங்களது தலையில் பொதுபலசேனாவின் கொடியை கட்டியுள்ளனர்.
இலங்கைத் தேசியக்கொடிக்கு பதிலாக சிங்கமும் பௌத்த சின்னமும் பொறிக்கப்பட்டுள்ள கொடிகளை ஏந்திக் கொண்டு செல்கின்றனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘ “பள்ளிகள் அதிகம்”, “பள்ளிகள் அதிகம்” என்றும் “அரேபியாவுக்கு விரட்ட வேண்டும்” என்ற கோசங்களை எழுப்பிக்கொண்டு செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இந்த ஊர்வலத்தின் ஆரம்பத்தில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார பிக்கு ஊடகங்களுக்கு பெரிய உரையொன்றை ஆற்றியிருந்தார்.
பிக்குகளின் இவ் ஊர்வலத்தில் மட்டு விகாராதிபதியும் பங்கு கொண்டுள்ளார்.
பௌத்த மதத்தை பாதுகாப்பதாக கூறி அனுமதிபெற்று ஊர்வலம் நடத்தும் இப்பிக்குகள் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களையே எழுப்பிக்கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது.
இவ் ஊர்வலம் அளுத்கமயில் நடைபெற்ற ஊர்வலத்தை நியாபகம் ஊட்டுவதாய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


வேகத்திலேயே வீழ்ந்தது இலங்கை: குலசேகர....

சிம்பாப்வே, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் இலங்கை தோற்றமைக்கு, மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்களே காரணமென, இலங்கையின் நுவான் குலசேகர ஏற்றுக் கொண்டுள்ளார். இத்தொடரின் முதலாவது போட்டியில் சிம்பாப்வேயை அடித்துத் துவைத்த இலங்கை அணி, வெற்றிபெறும் நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற 227 ஓட்டங்களுக்குப் பதிலளித்தாடும் போது, 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளர்களே, இலங்கை விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில் கருத்துத் தெரிவித்த குலசேகர, "சிம்பாப்வே அணியில், அவர்களிடம் திறமை உள்ளது. ஆனால் அவர், மணிக்கு 120 தொடக்கம் 130 கிலோமீற்றர் வேகத்திலேயே பந்துவீசுவர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் உயரமானவர்கள், எனவே அவர்கள் வீசும் பந்துகள், அதிகம் மீளெழும் தன்மை கொண்டவை. ஷனொன் கப்றியல், மணிக்கு 140 கிலோமீற்றருக்கு அதிகமாக வீசுபவர். ஜேஸன் ஹோல்டரும் மிகவும் சிறப்பாகப் பந்துவீசினார், அவருக்கு அவுட்ஸ்விங் கிடைத்தது" என்று தெரிவித்தார். அடுத்த போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின், மாற்றங்களை உடனடியாகச் செய்ய வேண்டுமெனக் குறிப்பிட் நுவான் குலசேகர, துடுப்பாட்டம் தொடர்பாகவே அதிக கவனம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார். 10 மாதங்களுக்குப் பின்பு இலங்கை அணியில் இத்தொடருக்காக இடம்பிடித்த குலசேகர, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இறுதிநேரத்தில் அதிரடியாக ஆடவும் முயன்றிருந்தார். மீண்டும் போட்டிகளில் பங்குபற்றுவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த குலசேகர, கடைசி 2 போட்டிகளிலும் தனது பெறுபேறுகள் தொடர்பாக மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

15 -24 வயதினர் எச்.ஐ.வியால் அதிகளவில் பாதிப்பு....



நாட்டின் இளம் தலைமுறையினருக்கு இடையில் எச்.ஐ.வி வைரஸ் தொற்று பரவுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 வயது முதல் 24 வயதானவர்களிடம் இந்த தொற்று அதிகரித்துள்ளதாகவும்,  இதில் 95 சதவீதமானவை, பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகளே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. 

வடமாகாண பாடசாலை நேரத்தில் மாற்றம்....

..

வடமாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும், ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 07:30 க்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு, பிற்பகல் 01:30 க்கு முடிவடையும் என அவ்வமைச்சு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளையும் சீராக ஒரே நேரத்தில் இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு கல்வியமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - 

Welcome to tamil daily mirror

Welcome to tamil daily mirror