Tuesday, October 31, 2017

ஹக்கீம் அன்று செய்த துரோகம்
கல்முனையை இன்று வதைக்கிறது !



ஏ. எச். எம். பூமுதீன்

கிழக்கின் முக வெற்றிலை என வர்ணிக்கப்படும் கல்முனை மண் இன்று பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

சாய்ந்தமருது சமூகம் தனி உள்ளுராட்சி மன்றம் கோரி நிக்கும் வேளை, கல்முனைக்குடி சமூகம் நகரை நான்காக பிரி என்று முழங்கி இன்று நகர் இஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.

கல்முனைக்குடி என்றும் சாய்ந்தமருது என்றும் பிரிவினையை தூவிவிட்டதன் வெளிப்பாடே இன்றைய இந்த கல்முனை சீரழிவதட்கு காரணம் என்றால் அது மறுக்கப்படும் கருத்தாக இருக்க மாட்டாது.

கல்முனை மாநகர சபை மேயர் நிசாம் காரியப்பரா? அல்லது சிராசா? என்ற மோதலை முகா தலைவர் ஏட்படுத்தி இருக்காவிட்டால் இந்த பகை உணர்வு இரு ஊர்களுக்கும் வந்திருக்காது.

சிராசை நான்கு வருடங்களுக்கும் மேயராக வைக்காது பிரதேசவாதத்தை உண்டாக்கிய முழுப் பொறுப்பும் , தயாரிப்பும் அன்று முகா தலைவரால் செவ்வனே அரங்கேட்டப்பட்டது. அதன் பிரதிபலிப்புதான் இன்று கல்முனை நகரில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

தலைமைப் பதவியை தக்க வைத்துக்கொள்ளவும், கல்முனை நகரில் இருந்து தனக்கு நிகராக எவரும் வந்துவிடக்கூடாது என்ற முனாபிக் தனமான சொந்த இருப்புக்கான ஹக்கீமின் அரசியல் காய் நகர்தலால் இன்று கல்முனை மக்கள் ஒற்றுமை இழந்து , பிரதேசவாதம் முத்தி நகரமே அல்லோலகல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

சாய்ந்தமருது மக்கள் இந்தளவு தூரம் ஆவேசப்படுவதன் பின்னணியில் முகா தலைவர் இருப்பதாகவே அறியவருகின்றது.

சாய்ந்தமருத்துக்கு தனியான சபை எந்தளவுக்கு அந்த மக்களுக்கு முக்கியமோ அதேபோன்றே நகரை நான்காக பிரிக்க வேண்டும் என்ற கோஷமும் ஏனைய கல்முனை
 தொகுதி மக்களால் வரவேட்புடன் பார்க்கப்படுகின்றது.

இதனை, மக்கள்- ஊர் பிரிவினை வாதமின்றி சிறப்பாக செய்ய விடாமல் பின்னணியில் செயட்பட்ட முகா  தலைமையை கல்முனை தொகுதி சமூகம் ஒருபோதும் மன்னிக்காது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனை வீணாக வம்புக்குள் இந்த விவகாரத்தில் இழுத்துவிட்டு தப்பித்துக்கொள்ள முகா தலைமை முயட்சிப்பதை மக்கள் மிக தெளிவாக உணர்த்துள்ளார்கள். றிஷாத்தும் துரோகியல்ல, ஹரீஸும் துரோகியல்ல என்பது இன்று கல்முனை தொகுதி மக்களால் உணரப்படுகின்றது.

முகா தலைவரின் வழிகாட்டலில் ஊர் பிரிவினைவாதத்தையும் அமைச்சர் ரிஷாத்தை துரோகியாக இந்த விவகாரத்தில் முடிச்சி போடும் செயட்பாட்டை முகாவின் முன்னாள் மாகாணம் ஒருவர் செயட்படுத்திவருவதை மக்கள் அறியாமலில்லை என்பதை முகா தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.

பிரதேசவாதத்தின் தந்தை என்று அன்று
அதாவுல்லாஹ் வர்ணிக்கப்பட்டது போய் , இன்று பிரதேசவாதத்தின் மூத்த தந்தையாக முகா தலைவர் இந்தநிமிடம் முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றார்.

நாரே தக்பீர்...
பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சம்மாந்துறையை இரு சபைகளாக பிரிக்கும் திட்டத்தை கைவிட்டாரா?



மிக நீண்ட காலத்துக்கு முன்பு சர்ச்சைக்குரிய விடயமாக காணப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபையை இரு சபைகளாக பிரிக்கும் கதையாடலை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தூக்கிப் பிடித்திருந்தார். அதனை சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் குறிப்பிட்டிருந்தார். இருந்த போதிலும் சம்மாந்துறை மக்கள் ஒரு போதும் அப்படியான  ஒரு கோரிக்கையை முன் வைத்ததில்லை.

இது தொடர்பான எனது சுட்டிக் காட்டலை தொடர்ந்து விவாதம் சூடு பிடித்தது. கருத்துக் கணிப்புக்கள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஞாயிற்றுக் கிழமை வீதி புனரமைப்புக்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர், தான் முன்பு கூறிய சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்மாந்துறை பிரதேச சபையை இரு சபைகளாக பிரிக்கும் கதையாடலை விடுத்து சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக்க  வேண்டும் என கூறியுள்ளார்.

அவரது குறித்த பேச்சு இன்றைய தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் கரு ஜெயசூரிய காலம் தொட்டு முன் வைத்து வந்த சம்மாந்துறை பிரதேச சபையை இரு சபைகளாக பிரிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டாரா என சிந்திக்க தோன்றுகிறது.

அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சம்மாந்துறையை நகர சபையாக்குதல் தொடர்பில் அதிகம் சிலாகித்து வருகிறார். சம்மாந்துறையை நகர சபையாக்குதலுக்கான முயற்சிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தானே செய்தேன் என கூறுதலே இந்த சிலாகித்தலுக்கான பின்னணியாக இருக்கலாம்.

இருந்த போதிலும் அவர் முன்னர் கூறியிருந்த இரு சபைகள் கதையை தொடர்வாராக இருந்தால் அந்த பெயர் பெறுதல் அவருக்கு பகற் கனவாக அமையும். இதனை உணர்ந்து தான், தனது பேச்சை இப்படி அமைத்திருக்க வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Monday, October 30, 2017

இருதலை எறும்பாகி போன 
சாய்ந்தமருதுக்கான 
உள்ளூராட்சி சபை விவகாரம்
------------------------------------------------------


- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
-------------------------------------------------------
கல்முனைக்கு நான்கு உள்ளூராட்சி மன்றங்கள் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ள நிலையில், தமிழ் மக்கள் தரப்பில் அவர்களது பிரதிநிதிகள் இது தொடர்பில் இன்று கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் நாளை (31 ஆம் அமைச்சர் பைசர் முஸ்தபாவைச் சந்தித்து தங்கள் நிலைப்பாடு, கோரிக்கைகள் தொடர்பில்  விளக்கவுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் இன்றிரவு (30) நான் பல தமிழ் தரப்பு அரசியல்வாதிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது அனைவரும் ஒரே கருத்தையே வலியுறுத்திக் கூறினர். இந்த விடயங்களையே அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் நாளை முன்வைக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துகளை ஒருமுகப்படுத்தி கீழே தருகிறேன்.

1. சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அபிலாஷையான  உள்ளூராட்சி சபை ஒன்றைப் பெற்றுக் கொள்ளல் என்ற விடயத்தில் தாங்கள் ஒரு  போதும் தடையாக இருக்கப் போவதில்லை. இந்த விடயத்தில் சாய்ந்தமருது மக்களுக்கு பக்கபலமாக நாங்களும் இருப்போம். அவர்களின் கோரிக்கை நியாயமானது.

2. ஆனால் கல்முனையை மேலும் மூன்று பிரிவுகளாக பிரிக்கும் யோசனை முற்றாக நாங்கள் எதிர்ப்பதுடன் அந்தக் கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

3. தற்போது கல்முனையில் முஸ்லிம்கள் 70 சத வீதமாகவும் தமிழர்கள் 30 சத வீதமாகவும் வாழ்கின்றனர். இந்த நிலையில், சாய்ந்தமருது தனியாகப் பிரியும் போது முஸ்லிம்கள்  60 சத வீதமாக குறைந்து, தமிழர்கள் எண்ணிக்கை 40 சத வீதமாக அதிகரித்தாலும்   கல்முனை மாநகர சபை நிர்வாகம் தமிழர்களின் கைகளுக்குச் சென்று விடுமே என எவ்வாறு அச்சம் கொள்ள முடியும்?

4. இந்த விடயத்தில் ஒரு தரப்பு முஸ்லிம்கள் மட்டும்   அச்சம் கொள்வதற்கு காரணம், மருதமுனை மக்களும் தமிழ்ப் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தைக் கைப்பற்றி விடுவார்களோ  என்பதுதான்.

5. முஸ்லிம்களின் ஒரு சாராரின் இவ்வாறான மேலாதிக்கப் போக்கு காரணமாகவே அவர்கள் இப்போது கல்முனையில் நான்கு பிரிவுகளை உருவாக்குமாறு கேட்கின்றனர்.

6. அதாவது, சாய்ந்தமருது தனியாகப் பிரிந்தால் மற்றைய பிரதேசங்களை மூன்றாகப் பிரிக்க வேண்டுமென விரும்புகின்றனர்.

  (அ) கல்முனைக்குடியையும் கல்முனையையும் சேர்த்து ஒரு சபையை உருவாக்குதல்.

 (ஆ) பாண்டிருப்பு, நீலாவணை, மருதமுனை ஆகிய மூன்று பிரதேசங்களையும் இணைத்து  ஒரு சபையை உருவாக்குதல்.

(இ) நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு இரண்டையும் இணைத்து இன்னொரு சபை உருவாக்குதல் இதுவே இவர்களின் கோரிக்கை.

இவ்வாறானதொரு கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சாய்ந்தமருது பிரிந்து போகட்டும். ஆனால் கல்முனைக்குடி உட்பட அனைத்து முஸ்லிம் பிரதேச மக்களுடன்  தமிழர்களாகிய நாங்கள் ஒன்றுமையாக வாழவே விரும்புகிறோம்.

இல்லை.. கல்முனை பிரதேசம் நான்காக பிரிக்கப்பட்டே ஆக வேண்டும் என்றால். தமிழர்களுக்கு ஓர்  உள்ளுராட்சி மன்றம் அங்கு உருவாக்கப்பட வேண்டும். அதாவது, கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ்க் கிராமங்களை ஒன்றிணைத்து ஓர் உள்ளூராட்சி மன்றம் எங்களுக்கென்று உருவாக்கப்பட வேண்டும்.

அதவாது நான்கில் ஒன்றை மட்டுமே நாம் எமக்காக கோருகிறோம். கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை தமிழ்ப் பிரதேசம்,சேனைக்குடியிருப்பு, துரையிறங்கிய மேடை ஆகியனவற்றை இணைத்து தமிழர்களுக்கான ஓர் உள்ளுராட்சி மன்றம் உருவாக்கப்பட வேண்டும்.

எனவே, சாய்ந்தமருது தவிரந்த ஏனைய பிரதேச சபைகளை பிரிப்பதாயின் மேற்சொன்ன உடன்பாட்டின் கீழ் அது அமைய வேண்டும். இன்றேல். சாய்ந்தமருது தவிர ஏனையவற்றை பிரிக்க விடமாட்டோம்  இதனையே நாம் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் இன்று  தெரிவிக்கவுள்ளோம் என அவர்கள் கூறினர்

ஆக, மொத்தத்தில், தமிழர் தரப்பு விரும்பும் வகையில் கல்முனையை நான்காக பிரிப்பதற்கு அரசு தரப்பு உடன்பட்டாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை மறுத்தால் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை இல்லை.

நான்காக பிரிக்காமல் சாய்ந்தமருதுக்கு மட்டும்   உள்ளூராட்சி சபையை வழங்குங்கள் என்று தமிழர் தரப்பு தெரிவித்து அதனை அரசு ஏற்றுக் கொண்டாலும் சாயந்தமருதுவுக்கு மட்டும் தனியான உள்ளூராட்சி சபையை வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடப் போவதில்லை. 

அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் நான்கு கூறுகள் கோரிக்கையை அரசும் தமிழ் தரப்பும் ஏற்க மறுத்தாலும் சாய்ந்தமருதுவுக்கு உள்ளூராட்சி சபை என்று ஒன்று இல்லை என்பதே இங்கு தெளிவு.

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சம்மாந்துறையை நகர சபையாக தரமுயர்த்தல் தொடர்பான பத்திரிகை அறிவித்தல் மன்சூரின் முயற்சியின் பலனாக வந்ததா?





அண்மையில் சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துதல் தொடர்பான மக்கள் கருத்துக்களை அறியும் பத்திரிகை அறிவித்தல் ஒன்று தினகரன் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. இது வெளியாவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு சம்மாந்துறையை நகர சபையாக தரமுயர்த்துதல் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தலைமையில் நடைபெற்றிருந்ததால், அதன் விளைவாகவே இது நடந்தேறியது என்ற செய்தியை  கொண்டு செல்லவும் மக்கள் அதில்  சற்று நம்பிக்கை கொள்ளவும் ஏதுவாக அமைந்திருந்தது. அவரின் முயற்சியினாலேயே இது நடந்தேறி இருந்ததாக அவரது முக நூல் பக்கத்திலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் உள்ளூராட்சி அமைச்சராக கருஜயசூரிய இருந்த காலத்திலிருந்தே  சம்மாந்துறையை இரு சபைகளாக பிரித்து தரமுயர்த்தும் கோரிக்கையை முன் வைத்ததாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வெளியாகிய பத்திரிகை அறிக்கையில் சம்மாந்துறையை இரு சபைகளாக பிரிப்பது சம்பந்தமான எந்த கருத்துக்களும் கோரப்பட்டிருக்கவில்லை. அங்கு கோரப்பட்டிருந்தது. சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துதலே.

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் கோரிக்கை எடுபட்டிருந்தால் சம்மாந்துறையை இரு சபைகளாக பிரித்து தரமுயர்த்தல் தொடர்பான மக்கள் கருத்தே குறித்த பத்திரிகை அறிவித்தலில் கோரப்பட்டிருக்க வேண்டும். இதிலிருந்து இங்கு கோரப்பட்ட பத்திரிகை அறிவித்தலுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூருக்கும் இடையில் எந்தவித சம்மந்தமுமில்லை என்பதை அறிந்துகொள்ளலாம். சம்மாந்துறை இரண்டாக பிரிக்கப்படாமல் தனி நகர சபையாக மாற்றப்பட்டால் அதற்கு அவர் உரிமை கோரவும் முடியாது.

இப் பத்திரிகை அறிவித்தல் வெளிவந்ததும் தனது கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கொதித்தெழுந்திருக்க வேண்டும். மாறாக அக் குறித்த பத்திரிகை அறிவித்தல் தனது முயற்சியினாலேயே வந்தது என கூறுவது ஊரா பிள்ளைக்கு தனது பெயரை வைக்க முயல்வது மாத்திரமன்றி வெட்கப்பட வேண்டியதும் தனது கோரிக்கை என்ன? பத்திரிகையில் வெளிவந்துள்ள விடயம் என்னவென தெரியாத நிலையில் அவர் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
ஊடக மாபியா செய்யும் ஹக்கீம், வெளிவந்தது ஆதாரம்



(ஹபீல் எம். சுஹைர்)

சில நாட்கள் முன்பு ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசெனாவுடன் அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் றிஷாத் ஆகியோர் கட்டாருக்கு  பயணம் செய்திருந்தனர். இதில் அமைச்சர் ஹக்கீம் தன்னோடு ஒரு மீடியா கும்பலையே அழைத்துச் சென்றிருந்தார். ஆனால், அமைச்சர் றிஷாதோ தன்னோடு யாரையும் அழைத்துச் சென்றிருக்கவில்லை. அமைச்சர் ஹக்கீம் அழைத்துச் சென்றவர்கள் முக நூல்களில் அமைச்சர் றிஷாதை மிகவும் கீழ் தரமான வார்த்தைகள் கொண்டு விமர்சிப்பவர்கள்.

சில மாதங்கள் முன்பு அமைச்சர் ஹக்கீம் இப்படியானவர்களை அழைத்துக்கொண்டு நுவரெலியாவுக்கு சுற்றுலா அழைத்து சென்றிருந்தார். தற்போது கட்டாருக்கு அழைத்து சென்றுள்ளார். அடுத்த முறை அமைச்சர் றிஷாதை விமர்சிப்பவர்களை அவர் விண்ணுலகம் அழைத்துச் சென்றாலும் அழைத்துச் செல்வார். அந்த நிலையிலேயே அமைச்சர் ஹக்கீம் உள்ளார். இதிலிருந்து ஊடக மாபியாவை வைத்துள்ளவர் யார் என்பதை மிகவும் வெளிப்படையாக அறிந்துகொள்ளலாம்.

அமைச்சர் ஹக்கீம் என்ன செய்தாவது தனது ஊடகத்தை கட்டி எழுப்புவதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளார். இருந்த போதிலும் தொடர்ந்தும் அவரது ஊடகம் மந்தகதியிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது. மலடியால் பிள்ளை பெற முடியாது என்பதை அமைச்சர் ஹக்கேம் அறிந்துகொள்ள வேண்டும். அமைச்சர் ஹக்கீம் கீழ் தரமான விமர்சனங்கள் செய்வோரை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி அவர்களுக்கு சிறந்த கருத்தியல் ரீதியான வாதங்களை முன் வைக்க தெளிவூட்ட வேண்டும்.
இறக்காமத்தில் மக்கள் காங்கிரஸின் முயற்சியினால்  மூன்று வீதிகள் நிறைவுறும் நிலையில்



இறக்காமத்தில் அமைச்சர் றிஷாதின் வேண்டுகோளுக்கமைவாக உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இறக்காமம் எட்டாம் பிரிவில் அமைந்துள்ள மையவாடி வீதி, இறக்காமல் ஏழாம் பிரிவில் அமைந்துள்ள நல்லதண்ணி மலை பிரதான வீதி, இறக்காமம் இரண்டாம் பிரிவில் அமைந்துள்ள வாங்காமம் வீதி ஆகிய மூன்று வீதிகள் நிறைவுறும் உள்ளன. இவற்றில் இறக்காமம் இரண்டாம் பிரிவில் அமைந்துள்ள வாங்காமம் வீதிக்கான வேலைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு ஏனைய இரு வீதிகளின் வேலைகளும் நிறைவு பெற்றுள்ளன. இவ் வீதிகள் ஒவ்வொன்றுக்கும் தலா இருபது இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூர்தீனுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் என்ற ரீதியிலும் இறக்காமத்தை சேர்ந்தவர் என்ற ரீதியிலும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். எதிர்காலத்தில் அமைச்சர் றிஷாதினூடாக பலவாறான சேவைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். இறக்காமம் கந்தூரி வைப்பவத்தில் உணவு நஞ்சாகிய விவகாரத்தில் மரணமடைந்த மூவருக்கும் தலா எட்டு இலட்சம் பெறுமதியான வீடுகளுக்கான உதவிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்து கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நௌபர் மௌலவி
தலைவர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு
இறக்காமம்
ஹரீசின் ஊர்ப் பற்றை பாராட்டுகிறேன்



சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பான மிகப் பெரும் போராட்டம் சென்று கொண்டு இருக்கும் நிலையில் நான்கு பிரதேச சபைகளாகவன்றி கல்முனை மாநகர சபையை பிரிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் மிக திடகாத்திரமாக உள்ளார். இவரின் இத் திடகாத்திரமான கருத்தை அவர் வெளிப்படையாக கூறி வருகின்றமையே இங்கு கவனிக்கத்தக்கது.

அவர் வெளிப்படையாக கூறுவதன் மூலம் சாய்ந்தமருது மக்களின் முழுமையான எதிர்ப்பை சம்பாதிப்பார். இது அவருக்கும் தெரியும். இருந்தாலும் அதனை அவர் சிறிதேனும் கவனத்தில் கொள்ளவில்லை. அவர் எடுத்திருக்கும் முடிவு சரியா பிழையா என்பதற்கு அப்பால் தனது கொள்கையை மிக வெளிப்படையாக முன்னெடுத்து வருகிறார். இதனை அவர் வெளிப்படையாக முன்னெடுக்காது வாக்குகளை கருத்தில் கொண்டு ஒரு அரசியல் வாதியாக மறைந்து செயற்பட்டிருக்கலாம். ஹரீஸ் அரசியல் வாதியல்ல. ஒரு சமூகவாதி.

சாய்ந்தமருது அனைத்து கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் அரசியல் வாதிகளை பாருங்கள். ஒருவர் கூட இந்த விடயத்தில் முன்னின்று களத்தில் நின்று போராடுவதாக இல்லை. இதற்கு எதிர்காலத்தில் கல்முனை மக்களின் வாக்குகளை பெற முடியாது என்ற ஒரு விடயம் பிரதான காரணம். ஆனால், சாய்ந்தமருது வாக்குகளை தான் இழப்பேன் என அறிந்தும் அதனை கருத்தில் கொள்ளாது போராடுகின்றார். அதுவே கொள்கை வீரனுக்குரிய அழகாகும்.

இனி சாய்ந்தமருது ஹரீசுக்கு எதிராக மாறும் அதே நேரம் கல்முனை ஹரீசின் கோட்டையாக மாறும். இதன் பின்னும் இவருக்கு கல்முனை பூரணமாக ஆதரவளிக்காது போனால் அவர்கள் துரோகிகள். ஹரீஸ் தூய முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் பாதை எடுத்துக்கொண்டிருக்கின்றார். அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மு.கா அம்பாறையில் இருந்து துடைத்து வீசப்படுவதட்கான அனைத்தும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

குறிப்பு: இங்கு நான் ஹரீசின் ஊர்ப் பற்றையும் கொள்கை மீது கொண்ட அவரது போராட்ட பண்பையும் பாராட்டுகிறேனே தவிர அவரது கொள்கை சரியானதா அல்லது பிழையானதா எனக் கூறவில்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை! அமைச்சர் றிஷாட் நேர்மையாக செயற்படுகின்றார் ஹரீஸ் தெரிவிப்பு



(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் திரிகரணசுக்தியுடன் செயற்பட்டுள்ளார் என்பதனையும் அவரது நேர்மையான செயற்பாடுகளையும் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் நேற்றிரவு (29) ஆற்றிய உரையின் மூலம் தெட்டத் தெளிவாக தெரிவித்து விட்டார்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அமைச்சர் ரிஷாத் விடாப்பிடியாக இருந்த போதும், கல்முனையை நான்கு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். சாய்ந்தமருதுவை மட்டும் பிரிக்க விடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் தெரிவித்ததன் மூலம் அமைச்சர் ரிஷாத் அவர்களை இன்று இந்தப் பிரச்சினையிலிருந்து நிரபராதியாக்கியுள்ள ஹாரீஸ் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.
சாய்ந்தமருதுக்கு தனியா பிரதேச சபை விவகாரத்தில் அமைச்சர் ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகிறார். பொய் சொல்கிறார் என்றெல்லாம் நான் உட்பட பலர் அவர் மீது அதிருப்தியான விமர்சனங்களை முன்வைத்து கருத்துகளை வெளியிட்டிருந்த நிலையில், அமைச்சர் ரிஷாத் அப்படிப்பட்டவர் அல்ல என்பதனை மக்களுக்கு பகிரங்கமாக விளக்கிய ஹரீஸ் அவர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
அதேவேளை, எமக்காக தனியான பிரதேச சபை ஒன்றை உருவாக்குவதில் பல எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுத்து முன்னின்று செயற்படும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் இன்று எங்களில் ஒருவனாகி விட்டீர்கள். நன்றிகள் அமைச்சரே!
இந்த விடயத்தில் உங்கள் மீது கொண்டிருந்த சந்தேகங்களை என் போன்ற ஆயிரக் கணக்கானோர் இன்று களைந்து கொண்டுள்ளோம்.

Wednesday, October 25, 2017

சம்மாந்துறையை  இரு சபைகளாக பிரிக்கும் கோரிக்கை, சம்மாந்துறை மக்களால் எப்போது முன் வைக்கப்பட்டதென பா.உ மன்சூர் கூற வேண்டும்




பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயற்றும் முயற்சிகளை செய்து வருவதை யாராலும்  மறுக்க முடியாது. இது போன்று பல தரப்புக்களில் இருந்தும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் மறுக்க முடியாத உண்மைகளில் ஒன்று. இன்று பாராளுமன்ற உறுப்பினரின் முக நூலில் பதிவாகியிருந்த செய்தியில் ஒரு விசேடம் இருந்தது. அதில் சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்மாந்துறை பிரதேச சபையை இரு சபைகளாக பிரித்து, நகர மற்றும் பிரதேச சபைகளாக மாற்றும் நடவடிக்கையை தான் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தமையே அதிலிருந்த விசேடமாகும்.

குறித்த செய்தி இன்று பத்திரிகைகளிலும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதிலிருந்த பா.உ மன்சூரின் விசேட திட்டத்தை யாருமே பெரிதாக தூக்கிப்பிடிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர், சம்மாந்துறை மக்களால் சம்மாந்துறை பிரதேச சபையை பிரித்து தரமுயர்த்தும் கோரிக்கை, எப்போது? யாரால்? முன் வைக்கப்பட்டிருந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இப்படியான ஒரு கோரிக்கை சம்மாந்துறை மக்களால் முன் வைக்கப்பட்டதாக நான் அறிந்தில்லை.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் சம்மாந்துறையை இரு சபைகளாக பிரித்து தரமுயர்த்தும் நடவடிக்கையை யாருமே கேட்காமல் செய்து தருவதாக கூறியிருந்தார். அச் சந்தர்ப்பத்தில் அக் கோரிக்கை பலத்த எதிர்ப்பை பெற்றது.சம்மாந்துறை மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை பெற்ற இக் கோரிக்கை அதாவுல்லாஹ்வினால் சம்மாந்துறை மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக் கோரிக்கையை அன்று சம்மாந்துறை மக்கள் ஏற்றிருந்தால், இன்று சம்மாந்துறை பிரதேச சபை இரு சபைகளாக பிரிக்கப்பட்டிருக்கலாம். இதனை யாராவது மறுக்க முடியுமா?

இக் கோரிக்கை சம்மாந்துறை மக்களிடம் எடுபடவில்லை என்பதற்கு, அதாவுல்லாஹ் வழங்கிய் வாக்குறுதியை ஏன் செய்ய முடியவில்லை என்று சம்மாந்துறையை சேர்ந்த யாருமே கேள்வி எழுப்பியதில்லை. சம்மாந்துறை மக்களின் கோரிக்கையானது சம்மாந்துறை பிரதேச சபையை பிரிக்காமல் நகர சபையாக தரமுயர்த்துவதாகும். இக் கோரிக்கை இன்று நேற்று முன் வைக்கப்பட்டதல்ல. முன்னாள் மு.காவின் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் காலத்திலேயே முன் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றுவரை அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாத வகையிலேயே சம்மாந்துறை மக்களின் அரசியல் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இதில் வெளியில் எடுத்த எடுப்பில் கூற முடியாத இன்னும்  சில பாதிப்புக்கள் உள்ளன. அவைகளை தேவைப்படும் நேரத்தில் கூறலாம் என்றுள்ளேன். அல்லாது போனால் இனவாத பட்டத்தை தேவையில்லாமல் கேட்டு வாங்கி விடுவேன். இக் கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கைவிட வேண்டும் அல்லாது போனால் எப்போது யாரால் முன் வைக்கப்பட்டதென கூற வேண்டும். இதனூடாக சம்மாந்துறை மக்களின் உண்மையான கோரிக்கைகளை, தாகங்களை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அறியத் தவறி விட்டாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Tuesday, October 24, 2017

மூன்று வீடுகளை எல்லாம் அமைச்சர் றிஷாத் ஒரு சேவையாகவே கணக்கெடுப்பதில்லை

மூன்று வீடுகளை  எல்லாம் அமைச்சர் றிஷாத் ஒரு சேவையாகவே  கணக்கெடுப்பதில்லை



(ஹபீல் எம்.சுஹைர்)

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் றிஷாதின் வாக்குறுதிக்கமைய அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் உணவு நஞ்சாகிய விவகாரத்தில் மரணமடைந்த மூன்று குடும்பந்தாருக்கும் வீடுகளை கட்டுவதற்கான முதல் கட்ட உதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த விடயம் எந்தவொரு செய்தி தளங்களிலும் வந்திருக்கவில்லை. பெரிதாக முக நூற்களிலும் பரவி இருக்கவில்லை.

இதற்கு பிரதான காரணம் அமைச்சர் றிஷாத் அணியினர் இதனை ஒரு பிரதான விடயமாக கருதி இருக்கவில்லை என்பதாகும். வடக்கிலே ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டிக்கொடுத்த அமைச்சர் றிஷாதுக்கு இதுவெல்லாம் சிறிய சேவைகளாக தெரியலாம். ஒரு மலசல கூடத்தை கூட கட்டிக்கொடுக்காத (அம்பாறை மாவட்டத்தின் முக வெற்றிலையான கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள பஸ் தரிப்பு நிலைய மலசல கூடம் சென்று பார்த்தால் மு.காவின் சேவைகள் தெரியும்) மு.கா ஆட்சி செய்த கிழக்கு மாகாணத்தில் மூன்று வீடுகள் கட்டிக்கொடுப்பதானது சாதாரணமாதல்ல. 

அதுவும் மு.காவினால் ஏறெடுத்தும் பார்க்கப்படாத இறக்காமப் பிரதேசத்துக்கு சென்று அமைச்சர் றிஷாத் உதவி செய்திருப்பதானது மிகவும் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியதாகும். மாணிக்கமடு சிலை அகற்றல் உட்பட பல வாக்குறுதிகளால் சலிப்படைந்திருக்கும் இறக்காம மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றியுள்ள அமைச்சர் றிஷாதின் அரசியல் செயல்பாடு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Friday, October 20, 2017

பிரபல்யத்துக்காக முஸ்லிம்களை பகடைக்காயாக பயன்படுத்தும் சிங்கள ஊடகங்கள்.

-பரீட் இஸ்பான்-



யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நாட்டிலே முஸ்லிம்களை பயன்படுத்தி தங்களது ஊடகங்களை பிரபல்யப்படுத்தும் வேலைகளை சிங்கள ஊடகங்கள் முன்னெடுத்து வருகின்றன. பொருளாதாரத்தில் மேலோங்கி இருந்த முஸ்லிம் சமூகத்தை திட்டமிட்டு அழிக்கும் நோக்கில் யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் பல இனவாதக் குழுக்கள் தோற்றம் பெற்றன. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியின் தோல்வி கூட இனவாதம் தோற்றுவிக்கபப்பட்டதால்தான். முஸ்லிம்கள் வரலாற்றில் ஒன்றுபட்டு ஆட்சி மாற்றத்துக்கு துணிந்து வாக்களித்தார்கள்.

நவீன மாற்றம் இன்று செய்திகள் சமூக வலைத்தளங்களின் ஊடாக கண் சிமிட்டும் நேரத்தினுள் செய்திகள் பரிமாறும் அளவு  தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

இனவாதிகளின் செயற்பாடானது பள்ளிவாயல்களை உடைத்தல், முஸ்லிம்களின் ; வர்த்தக நிலையங்களை தாக்குதல், முஸ்லிம்களின் மீள்குடியேற்த்தை தடுத்தல் என்ற போக்கில் இந்த நாட்டில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இன்று பிரபல சிங்கள ஊடகங்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை கேள்விக்குறியாக்கும் இனவாதிகளின் செயற்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் வில்பத்தை அழிப்பவர்களாகவும,; இயற்கைக்கு எதிரானவர்களாகவும் இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மாத்திரமே உரித்தானது என்ற வகையிலான இனவாதக் கருத்துக்களை சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாக திசை திருப்பும் வேலைத்திட்டத்தினை இனவாத சமூக வலைத்தளங்களும், சில சிங்கள ஊடகங்களும் தங்களை பிரபல்யப்படுத்துவதற்காக இவ்வாறான இனவாதப்பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இனவாதிகள் அமைச்சர் றிஷாதை சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விரோதி போன்று காட்டி தங்களை தங்களது இனத்துக்காக போராடும் போராளிகள் போன்று காட்ட பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். வில்பத்தை றிஷாட் அழித்து விட்டார் என்ற பிரச்சாரமும் இவர்களின் இனவாத சிந்தனையும், ஊடகப்பிரபல்யமுமே இவ்வாறு கடந்த பொதுத்தேர்தலில் பொதுபல சேனா தேர்தலில் போட்டியிட்டு மண் கவ்வியது நாம் அறிந்ததே.

இவற்றை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில சிங்கள ஊடகங்கள் இன்று அமைச்சர் றிஷாட் பதியுதீனை சிங்கள மக்கள் மத்தியில் ஒரு இன விரோதி போன்று காட்டி அப்பாவி சிங்கள மக்களை உசுப்பேற்றி தங்களது ஊடகத்தை பிரபல்யப்படுத்தும் வேலைத்திட்டங்களை கட்ச்சிதமாக செய்து வருகின்றனர்.

அமைச்சர் றிஷாட் செய்கின்ற அனைத்த அபிவிருத்திகளையும், வேலைத்திட்டங்களையும் திரிபுபடுத்தி சிங்கள மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் போன்று ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் அதிகமான பணம் செலவு செய்து சிங்கள மக்களுக்கு இனவாதத்தை உருவாக்கும் வேலைத்திட்;டங்களை ஒரு சில ஊடகங்கள் செய்து வருகின்றமை எதிர்கால சுதந்திர இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தத்தை உருவாக்கி விடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

எங்கு எது நடந்தாலும் மக்கள் மத்தியில் செய்திகளை கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களே பிரதான பங்கு வகிக்கின்றது. ஊடகங்கள் நடுநிலைமையாகவும், உண்மையை எடுத்துச் சொல்பவர்களாகவும் ; இந்த நாட்டில் எந்தப்பிரச்சினைகளும் இடம்பெறாது என்பதே நிதர்சனம்.

முஸ்லிம் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் இவ்வாறான ஊடக இனவாதம் இடம்பெறுவதை நீங்கள் அறீவீர்களோ என்பதை நாம் அறியோம். இருப்பினும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு உங்களை வேண்டிக் கொள்வதோடு. முஸ்லிம் அரிசியல் தலைமையகள், புத்தி ஜீவிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது முஸ்லிம் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பாகும்.
 இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறினால் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான மிகப்பெரிய ஊடக இனவாதக் குழுக்கழுவை உண்டுபண்ணி முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

குறிப்பு: இனவாதிகளின் செயற்பாடு அமைச்சர் றிஷாதுக்கு எதிரானது என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள் அமைச்சர் றிஷாட் போராடுவது வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் உரிமைக்காகவும், நாட்டில் முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்காகவும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Thursday, October 19, 2017

தனியார் வைத்தியசாலைகள் வெறுமனே பணம் உழைக்கும் குறிக்கோளை மட்டும் கொண்டு இயங்குபவை அல்ல. சேவை நோக்குடன் மனிதாபிமான ரீதியில் இயங்கி வருவனவாகும்...

- அமைச்சர் #றிஷாட் #பதியுதீன் -



இலங்கையின் தொழில் முயற்சியாண்மையை சர்வதேசத்துடன் இணைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டத்தை இலக்காகக் கொண்டு கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (#NEDA) செயற்பட்டு வருவதாக அமைச்சர் றிஷட் பதியுதீன் தெரிவித்தார்.

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் 2017 ஆம் ஆண்டுக்கான மேல்மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற போது, #பிரதம #அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

இங்கு உரையாற்றி அமைச்சர் கூறியதாவது,

"இலங்கை வணிக சங்கமும், நெடா நிறுவனமும் இணைந்து நடாத்தும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ள வெற்றியாளர்களை வாழ்த்துகின்றேன். இலங்கையின் நடுத்தர சிறு முயற்சியாளர்கள் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். #விவசாயம், #கால்நடை, #மீன்பிடி, #உற்பத்தித் துறை, #சுற்றுலாத் #துறை மற்றும் #மருத்துவ, #விருந்தோம்பல் வசதிகளை மேம்படுத்தும் இந்தத் துறையில் ஈடுபடுவோருக்கு எமது அமைச்சு பல்வேறு வழிகளில் உதவி வருகின்றது.

தனியார் வைத்தியசாலைகள் வெறுமனே பணம் உழைக்கும் குறிக்கோளை மட்டும் கொண்டு இயங்குபவை அல்ல. சேவை நோக்குடன் மனிதாபிமான ரீதியில் இயங்கி வருவனவாகும். மேலும், இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலைகளின் இயக்குனரான, ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியை மேல் மாகாணத்துக்கானா தொழில் முயற்சியாளர்களுக்குரிய  சிறந்த விருதைப் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உத்வேகம் அளிக்க இவ்வாறான விருது வழங்குவது உதவுமென நான் கருதுகின்றேன்" என்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஒமர் காமில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 - ஊடகப் பிரிவு -
முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் மிரட்டலுக்கு அடிபணிவாரா???? மு.கா.தலைவர்.
=======================



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் ஒலுவிலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் முதலமைச்சர் தனக்கு அதிகாரம்(MP) தன்னுடைய அடிவருடிகளை சில பிரதேசங்களில் இருந்து சுமார் 8 வேன்களில் அழைத்துச் சென்றார். இந்த குழுவில் கல்குடாவில் இருந்து கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் தலைவர் ரவூப் ஹக்கீம் எதுவித பதிலும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டார்.  இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் தனக்கு தேசியப் பட்டியல் தரவேண்டும் அதற்கு கல்குடா மக்களும் பூரண ஆதரவு என்பதை தெரிவிப்பதற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியாரையும்,முன்னாள் கோறளை பற்று மேற்கு தவிசாளர் ஹமீட் அவர்களையும் முதல்வருக்கு தேசிய பட்டியல் கொடுப்பதற்கு கல்குடா முழுக்க ஆதரவு என்ற பேச்சுகளை முடக்கிவிடுமாறு முதலமைச்சர் பணித்திருக்கிறார். வெள்ளிக்கிழமை நாளை(20) வரைதான்  தலைவருக்கு நேரம் கொடுத்திருக்கிறார். அவ்வாறு தராவிட்டால் தான் மாற்று அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவேண்டி வரும்(UNP இணைவு). என்றும், தனக்கு தேசிய பட்டியலை தந்தால் பிரதமருடன் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அமைச்சு ஒன்றை எடுத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார். இத் தகவல் முன்னாள் முதல்வரின் நெருங்கிய சகா ஒருவரே தெரிவித்தார்.

தற்போது மு.கா. தலைவர் இந்த மிரட்டலுக்கு அடிபணிந்து தேசியபட்டியலை கொடுப்பாரா???? ஏற்கனவே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏறாவூரில் இருக்கத்தக்கதாக மீண்டும் ஒருவருக்கு வழங்குவது நியாயமா???? தனி நபர்களை திருப்தி படுத்துவதுதான் தலைவரின் பணியா???? ஏறாவூரின் அரசியலுக்கு (அன்று பஸீர்,இன்று நஸீர்) தொடர்ந்து மு.கா.தலைவர் அடிமையா???
கிழக்கு மக்களின் அபிலாஷைகளை இவ்வாறுதான் தலைமை குழிதோண்டி புதைக்குமா????வாக்குறுதி வழங்கப்பட்ட பிரதேசங்களின் நிலை என்ன??? என்ற கேள்விகளுடன் அரசியல் அவதானிகளும்,புத்தி ஜீவிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Wednesday, October 18, 2017



புதிய அரசியலமைப்பு தேவையில்லை – அஸ்கிரிய, மல்வத்த கூட்டு சங்க சபா முடிவு




புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோஇப்போதைய சூழலில் நாட்டுக்குஅவசியம் இல்லை என்று, மல்வத்த,அஸ்கிரிய பீடங்களின்  கூட்டு சங்க சபாமுடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
                                                                                                                                                            
கண்டி- தலதா மாளிகையில் நேற்றுநடந்த துறைசார் நிபுணர்களுடனானகலந்துரையாடலை அடுத்தே, இந்த முடிவுஎடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, இத்தகையதொரு முடிவைசங்க சபா எடுத்திருந்த போது, ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அவசரமாகபௌத்த பீடங்களின்மகாநாயக்கர்களைச் சந்தித்து,நிலைமையைவிளங்கப்படுத்தியிருந்தார்.

எனினும், அரசியலமைப்பு மாற்றத்துக்குமல்வத்த பீடாதிபதி சாதகமானகருத்துக்களையே வெளியிட்டிருந்தார்.


சில நாட்களுக்கு முன்னர், அஸ்கிரியபீடாதிபதியை அமைச்சர் லக்ஸ்மன்கிரியெல்ல சந்தித்த போதும்,அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில்இருந்து ஒதுங்கிக் கொள்வதுபொறுப்பற்ற செயல் என்று கருத்துவெளியிட்டிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


தென்பகுதியை நேற்றிரவு கலங்கடித்த வெடிப்பும் ஒளிப்பிளம்பும் விண்கல் வெடிப்புச் சத்தமாக இருக்கலாம் எனத் தெரிவிப்பு




தென்பகுதியில் நேற்றிரவு கேட்ட பாரியவெடிப்புச் சத்தம் மற்றும் திடீரெனத்தோன்றிய ஒளிப்பிளம்பினால் மக்கள்மத்தியில் பதற்றமான நிலைகாணப்பட்டது.

நேற்றிரவு 8.45 மணிக்கும் 9 மணிக்கும்இடையில், பெரும் இரைச்சல் மற்றும்வெடிப்புச் சத்தம் கேட்டதுடன், வானத்தில்ஒளிப்பிளம்பும் அவதானிக்கப்பட்டது. மாத்தறை, அக்குரஸ்ஸ, தெனியாய பகுதிமக்கள் இந்த சத்தத்தை கேட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் கரையோரத்தில்வசிக்கும் மக்களில் சிலர், வானத்தில்இருந்து ஒளிப்பிளம்பு தோன்றியதையும்கண்டுள்ளனர்.

தென்மாகாணத்தின் பல பகுதிகளிலும்வசிக்கும் மக்கள், வித்தியாசமானஒளிப்பிளம்பு மற்றும் ஒலியைக்கேட்டதாக முறையிட்டிருப்பதாக அனர்த்தமுகாமைத்துவ நிலைய பேச்சாளர்அத்துல கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மாத்தறை, காலி பகுதிகளில் கடலைஅண்டிய பகுதிகளில் உள்ள மக்கள்சிறிய நில அதிர்வு போன்ற சத்தத்தையும்உணர்ந்துள்ளனர் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

பெரும் இரைச்சலுடன் வெடிப்புச் சத்தம், வானில் காணப்பட்ட ஒளிப்பிளம்பினால்தென்மாகாண மக்கள் நேற்றிரவுபதற்றமாக காணப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது, தென்பகுதி வானில் எந்தவிமானங்களும் பயணம் செய்யவில்லைஎன்று விமானப் போக்குவரத்துஅதிகாரசபையினர்உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டகொழும்பு பல்கலைக்கழக பௌதிகவிஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் சந்தனஜெயரத்ன, விண்கல் ஒன்றினால் ஏற்பட்டவெடிப்புச் சத்தமாக அது இருக்கக் கூடும்என்று தெரிவித்துள்ளார்.

“இதுபோன்ற வெடிப்புகள், ‘நெருப்புப்பந்து வெடிப்பு’ என்றுஅழைக்கப்படுகிறது. விண்கல் பூமியின்வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும்ஏற்படுகிறது.

இந்த விண்கல் 50 செ.மீஅளவுடையதாகஇருக்கலாம். ஒவ்வொரு விண்கல்லும், பூமியின் வளிமண்டலத்துக்குள்செக்கனுக்கு 65 கி.மீ வேகத்தில்பிரவேசிக்கும்.

அதிக வேகத்தினால்வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும், வெப்பத்தினால் வெடித்துச் சிதறும். அதனால் தான் வெடிச்சத்தம் எழுக்கிறது.

வெவ்வேறு நிற ஒளியுடன், விண்கல்நுழைந்ததை மக்கள் பார்த்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பச்சைநிறத்திலும், மஞ்சள் நிறத்திலும்கண்டுள்ளனர்.

இந்த வெடிப்பு சேதங்களை ஏற்படுத்தக்கூடும்.  ஆனால், அதிஸ்டவசமாக, சிறியதுண்டுகளாக உடைந்துள்ளது.

விண்கல்லின் பாகங்களை மக்கள்தொடக் கூடாது. அதில் கதிரியக்கதாக்கங்கள் இருக்கக் கூடும். அதனால்மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படும். இடனந்தெரியாத பக்ரீரியாக்கள் அதில்இருக்கும்.” என்றும் அவர்எச்சரித்துள்ளார்.

அதேவேளை, நேற்றிரவு தோன்றியஒளிப்பிளம்பு பற்றிய எந்தச் சம்பவமும்பதிவாகவில்லை என்று இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் கடற்படை, விமானப்படைஎன்பனவும், எத்தகைய சம்பவங்களும்இடம்பெறவில்லை என்றும் உறுதிசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இந்திய முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி இலங்கை முஸ்லிம்களுக்கும் வரும் ஆபத்து – கண்டியில் அமைச்சர் றிஷாட்




இந்தியாவில் தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்து அங்கு 26 சதவீதமான வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இரண்டு சதவீத்துக்கு குறைவாக மாற்றியமைத்தது போல இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைப்பதற்கான திட்டமிட்ட சதி இடம்பெறுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார்.
மக்கள் காங்கிரசின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பும் கட்சிக் கினை புனரமைப்புக் கூட்டமும் கண்டியில் இன்று காலை (18) இடம்பெற்ற போது உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி மைத்திரியையும் பிரதமர் ரணிலையும்; ஆட்சிக்கு கொண்டு வருவதில் முன்னின்று உழைத்த முஸ்லிம் சமூகத்தை இந்த நல்லாட்சி ஏறெடுத்தும் பார்க்காமல் எட்டி உதைய நினைக்கின்றது. அதே போல தமது வாழ்நாள்முழுவதும் ஆட்சியிலிருந்து தாம் விரும்பியதையெல்லாம் மேற்கொள்ள முடியுமென்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருந்த கடந்த ஆட்சியின் தலைவரை வீட்டுக்கு அனுப்பிய முஸ்லிம் சமூகத்தை அந்தத் தலைவரே இப்போது அரவணைத்து, அன்பு காட்டி, உபசரிக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதுதான் கால மாற்றத்தின் ஓட்டம்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்து விட்டோம் என்ற மமதையிலும் அதிகார வெறியிலும் முஸ்லிம்களை அலட்சியப்படுத்திய முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப எமது சமூகம் நிர்ப்பந்திக்ப்படட்டது.
அபிவிருத்திப் புரட்சிகளையும் பொருளாதார மேம்பாட்டையும் யுத்தங்களையும் வென்ற ஜப்பான், மலேசியா, துருக்கி போன்ற நாடுகளின் தலைவர்கள் ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பது போல மஹிந்தவும் இருப்பாரென சிங்கள சகோதரர்கள் அனைவரும் நம்பி இருந்தனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிங்களக் கிராமங்களின் வீடுகளிலே முன்னாள் ஜனாதிபதியின் படங்களை கொளுவிக் கடவுள் போல அவரை பூசிக்கப்பட்ட வரலாறு இருந்தது.
முஸ்லிம் சமூகத்தையும், இஸ்லாத்தையும் புனித குர்ஆனையும் தூஷித்த,  பொது பல சேன இயக்கத்தினரின் காட்டுமிராண்டித் தனங்களை அடக்காமல் அமைதியாக இருந்து பாரத்துக்கொண்டிருந்த அந்த ஆட்சியை நாங்கள் வீட்டுக்கு அனுப்பினோம்.
முஸ்லிம் சமூகத்தின் மீது அநியாயங்கள் இழைக்கப்பட்ட போது அரசிலிருந்த நாங்கள் தட்டிக்கேட்காமல் கைகளைக்கட்டிக்கொண்டு பெட்டிப்பாம்பாக, பேசாமடைந்தைகளாக இருந்ததாக நீங்கள் நினைத்திருக்கலாம்.
நாங்கள் மஹிந்தவிடம்; சென்று அவற்றைத் தட்டிக்கேட்ட போது எம்மீது சீறிப்பாய்ந்த பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. வாக்கு வாதம் முற்றி, வெகுண்டெழுந்து அந்தத் தலைவர் அறையைவிட்டு வெளியேறிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
தற்போதைய அரசாங்கம் இந்த இரண்டரை வருட காலத்தில் எமது சமூகத்துக்காக எதையும் செய்ததென்று எவரும் மார்தட்டிச் முடியாது.
கடந்த அரசில் எங்களுடன் ஒரே அமைச்சரவையிலிருந்த மைத்திரியையும் இனிமேல் பிரமராக வருவோமா என நினைத்தம் பார்க்காத? ரணிலையும் ஆட்சிக்குக் கொண்டுவந்து அலங்கரித்ததன் பிரதிபலன்களை இன்று படிப்படியாக அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். எந்தவொரு காலத்திலும் சேர்ந்துகொள்ள முடியாத இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளை ஒரே தளத்துக்கு கொண்டு வந்து ஆட்சியமைக்க வழிசமைத்த நமது முஸ்லிம் சமூகத்தை செல்லாக் காசாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வந்து நமது சமூகத்தை கருவறுக்கும் முயற்சிகள் இடம்பெறும் அதேவேளை புதிய அரிசியலமைப்பை அவசர அவசரமாகக் கொண்டு வந்து இன்னுமொரு சமூகத்தை திருப்திப்படுத்துவதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.
எமது சமூகத்துக்கான அபிலாஷைகளையும் பங்குகளையும் தட்டிக்கேட்டால் துரோகிகளாக, இனவாதிகளாக முத்திரை குத்தப்படுகின்றோம்.
அப்பாவித் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத்தூண்டி, இந்த நாட்டை குட்டிச்சுவராக்கியமை பேரினவாதத் தலைவர்களினது அதிகார வெறியும் அகம்பாவங்களுமே என்பதை இந்த அரசு மீண்டும் ஞாபகத்தில் இருத்த வேண்டும்.
நம்மைப் பொருத்தளவில் இறைவனின் துணையும் நமது பிரார்த்தனைகளும் இருக்கும் வரை நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற தூய எண்ணத்தில் எதிர்காலத்தில் நமது வாக்குரிமைகளை சரியாக பயன்படுத்துவோம். இதுவே நமக்கு விமோசனம் கிடைக்க வழியேற்படுத்தும். என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் காதர் ஹாஜியாரின் மருமகனும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான அம்ஜாத், மக்கள் காங்கிரசின் கண்டி மாவட்ட அமைப்பாளராக கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாதினால் நியமிக்கப்பட்டார். கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ருப், இஷாக் ரஹ்மான், செயலாளர் சுபைதீன், பிரதித் தலைவர் ஜெமீல், அமைச்சரின் கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன் கட்சியின் முக்கியஸ்தர் றிஸ்மி, தொழிலதிபர் முஹமட் உதுமான் உட்பட முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா?



வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிய கதையாடல்கள் வரும் போதெல்லாம் அது பற்றி தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய மு.கா ஒழித்து விளையாடுகிறது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமா என்ற வினாவை எழுப்புகின்றனர். எனவே, இது சாத்தியமானதா என்பது தொடர்பில் ஆராய கடமைப்பட்டுள்ளோம்.

சில காலங்கள் முன்பு இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியையும் தற்போதுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியையும் எடுத்து நோக்குங்கள். இதுவெல்லாம் சாத்தியம் என்று நினைத்தோமா? நேரிய முயற்சிகள் சிறந்த விளைவை தரும்.

வடக்கு, கிழக்கு இணைப்பு இதற்கு முதல் நடக்காத ஒன்றுமல்ல. முன்னாள் இலங்கை ஜனாதிபதிகளில் ஒருவரான ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் காலப்பகுதியான 1987ம் ஆண்டு அது தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தது.  தற்காலிகமாக இணைப்பிற்கும் நிரந்தர இணைப்புக்கும் ஒரே வகையான முறைகள் தான் பயன்படுத்தப்பட்டன. அன்று கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு பதிலாக இணைக்கப்பட்ட இரு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தால் இன்று வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும்.

அன்று இனவாத செயற்பாடுகள் இல்லாமலுமில்லை. இனவாத செயற்பாடுகள் ஆதிகாலம் தொட்டே நிலவி வருகிறது. குறித்த வடக்கு, கிழக்கு இணைப்புக்கு நடப்பதற்கு சுமார் நான்கு வருடங்கள் முன்பு, அதாவது 1983ம் ஆண்டு பாரிய இனக்கலவரம் ஒன்றே இடம்பெற்றிருந்தது. இப்படியான நிலையில் இதனை செய்ய முடியுமாக இருந்தால் இன்று அதனை செய்வதொன்றும் பெரிய விடயமல்ல. இதனை இணைத்ததன் பின்பும் பாரிய இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முஸ்லிம்களுக்கு பாதகம் என நன்கு தெரிந்தும் தங்களது பதவி பட்டங்களை பாதுகாத்துக்கொள்ள  எத்தனையோ விடயங்களை மு.கா உட்பட முஸ்லிம் கட்சிகள் ஆதரித்துள்ளன. அது போன்று தங்களுக்கு பாதகம் தான் என்றாலும் வீசுவதை வீசினால் பேரின பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதகில்லை. இவ் இணைப்பின் சாத்தியத்தியத்துக்கு இவர்களே பெரும் சான்றாகும். இவ் இணைப்பில் பேரின மக்கள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புக்களில்லை. இன்று வடக்கு, கிழக்கில் பேரின மக்கள் சிறுபான்மையினராகவே வாழ்ந்து வருகின்றனர்.

அன்று இருந்த தொகுதிவாரி தேர்தல் முறை மிக இலகுவான தேசிய கட்சிகளுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்தது. இன்றைய தேசிய அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும் பான்மை உள்ளது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமாகும். ஏன் இணைப்பு சாத்தியமில்லை? இன்று சட்டமுதுமானியான அமைச்சர் ஹக்கீம் இவ் இணைப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமென கூறுகிறார். இரு மாகாணங்களை இணைக்க இரு மாகாணங்களிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென சட்டத்திலோ அல்லது அரசியலமைப்பிலோ எங்குள்ளது என்பதை அமைச்சர் ஹக்கீம் வெளிப்படுத்துவாரா?

இவ்வாறானதொரு செயலை செய்தால் இவ் அரசாங்கம் நிலைத்திருக்காது என்ற வாதமுள்ளது. அன்று வடக்கு, கிழக்கை இணைத்தமையால் ஜே.ஆர் அரசு மிக இக்கட்டான நிலைக்கு சென்றிருந்தது என்பது வரலாறு கூறும் உண்மை. இது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் இற்கு தெரியாமலுமில்லை. இலங்கையில் நடக்கும் பல விடயங்கள் சர்வதேசங்களின் சித்து விளையாட்டுக்கள். அதிலும் தற்போது அமெரிக்காவின் செல்வாக்கு இலங்கையில் அதிகம். கடந்த ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு இருந்ததை அமெரிக்க முக்கியஸ்தர் ஒருவர் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளார். அமேரிக்கா வட கொரியாவை ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி அதன் சவாலை எதிர்கொள்ள சிந்திப்பதாக வட கொரிய அதிபரே கூறியிருந்தார்.

அதாவது இங்கு நான் கூற வருகின்ற விடயம் ஆட்சி மாற்றமெல்லாம் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு ஒரு பெரிய விடயமல்ல. இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற திட்டம் ஏலவே வகுத்திருப்பார்கள். இலங்கை போன்ற உணர்ச்சி அரசியலை நம்பி வாக்களிக்கும் மக்களை திசை திருப்புவது பெரிய விடயமுமல்ல. அன்று ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சவாலை எதிர்கொண்டாலும் இன்று அக் கட்சி தான் ஆண்டுகொண்டிருக்கின்றது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.