Wednesday, November 1, 2017

ரிஷாத் மீது கல்லெறி, உருவம் எரிப்பு:
அட்டாளைச்சேனைக்கு நடப்பது
சாய்ந்தமருதுக்கு நடக்க கூடாது!




ஏ. எச்.எம். பூமுதீன்

உள்ளுராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி கையொப்பத்துடன் சாய்ந்தமருதுக்கு தனி சபை என்பதும் கல்முனையை நான்காக பிரிக்கும் கோஷமும் புஷ்வாணமாகிவிட்டது.

2022 இல் தான் இனி இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்.

கல்முனையில் மொத்தமாக நான்கு நாள் ஹர்த்தால் இடம்பெற்று முடிந்துவிட்டது.
சாய்ந்தமருது மக்களின் மூன்றாம் நாள் ஹர்த்தால் தினமன்றே வர்த்தமானியில் கையொப்பமும் இடப்பட்டது. இதனால் ஆத்திரமுட்ட அந்த மக்கள் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கோசம் எழுப்பினர், அவதூறான வார்த்தைகளை பிரயோகித்தனர்.

அதையும் தாண்டி, மூன்று முஸ்லீம் அரசியல் வாதிகளின் உருவ பொம்மைகளை அவர்கள் உயிரோடு இருக்கும்போதே எரித்து அவமானப்படுத்தினர். இதிலும் வேதனையான நிகழ்வாக, சாய்ந்தமருது ஜும்மா பள்ளி நிர்வாகம் முன்னின்று இந்த உருவ எரிப்பை வழிநடாத்தியமையாகும்.

உயிரோடு இருக்கும் ஒருவரை - அவரைப்போன்று பொம்மை செய்து எரிப்பது என்பது தொடர்பில் இஸ்லாம் என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை அறிந்த உலமா பெரியவர்களும் இதட்கு ஒத்துழைத்தமை முஸ்லிம்கள் மத்தியில் மிக அருவருப்பாக நோக்கப்படுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அரசியல் கட்சி ஒன்றும் மார்க்கம் கிடையாது, அரசியல் வாதிகள் ஒன்றும் தூதர்களும் கிடையாது. இதனை மறந்து சாய்ந்தமருது சமூகம் நடந்து கொண்டது கேவலத்திலும் கேவலமாகும்.

முகாவுக்கு அன்றுதொட்டு இன்றுவரை பூரண ஆதரவு வழங்கும் முக்கியமான ஊர்களில் சாய்ந்தமருத்தும் ஒன்று. அதனால் , முகா தலைவருடன்தான் சாய்ந்தமருது மக்கள் கோபம் கொள்ள வேண்டும்.

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்பதில் தொகுதி எம்பி ஹரீஸ் இரும்பு பிடியாக ஆரம்பத்தில் இருந்தபோதும் அவரது கருத்தை அப்போதே மறுதலித்தவர் ஹக்கீம்தான். அதனை இன்று அதாவுல்லாவுடன் சேர்ந்து கட்சிதமாக செய்துமுடித்துள்ளார் ஹக்கீம்.

முகா தலைவரின் இவ்வாறான முனாபிக் தனத்தை அடுத்துதான் சாய்ந்தமருது முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்,அமைச்சர் ரிஷாத்தையும் பைசர் முஸ்திபாவையும் சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்து உறுதி மொழி வழங்கினார். இதனையும் முகா தலைவரே, அரச உயர் மட்டத்தினருடன் மன்றாடி தடுத்தார்.

அம்பாறையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மக்கள் அங்கீகாரம் பெட்ட ஒருவர் இல்லாமை அப்போது அரச உயர் மட்டத்தினரால் கவனத்தில் கொள்ளப்பட்டு ஹக்கீமின் கருத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன்படி, அமைச்சர் ரிஷாத், பிரதியமைச்சர் ஹரீஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஆகியோர் துரோகிகள் ஆகமாட்டார்கள். மாறாக ஹக்கீம்தான் துரோகி ஆகின்றார்.

அதட்காக ரிஷாத், ஹக்கீம், ஹரீஸ் போன்றோருக்கு உருவ பொம்மை கட்டி எரித்தமை சரியாகி விடாது. அது கண்டிக்கப்படக்கூடியதே.

அதிலும், எங்கோ உள்ள ஒருவருக்கு- அதாவது மக்கள் காங்கிரஸ் தலைவர்- அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு உருவ பொம்மை கட்டியமை எந்தவகையிலும் ஏற்க முடியாத ஒன்று. அதனை சாய்ந்தமருது மக்கள் செய்தமை அறவே மன்னிக்க முடியாத விடயம்.

சாய்ந்தமருதுக்கு இரு பெரிய உயர் அரச பதவிகளை வழங்கியது மட்டுமன்றி, அதன் கிளைகளை சாய்ந்தமருதில் திறந்து பலருக்கு தொழில் வாய்ப்பை வழங்கியது- சதொசவை திறந்து அதிலும் தொழில் வழங்கியதுடன்- மேலும் பல தொழில் வாய்ப்புக்களை வழங்கிய- சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை வழங்குவதில் ஹக்கீம் போன்று இல்லாமல் இதய சுத்தியோடு செயட்பட்ட அமைச்சர் ரிஷாதுக்கு உருவ பொம்மை கட்டியமையை அல்லாஹ் கூட பொருந்திக்கொள்ளமாட்டான்.

இதேபோன்றுதான்,கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், அட்டாளைச்சனையின் பள்ளி, மத்ரஸாக்களுக்கு எத்தனையோ உதவிகளை அமைச்சர் ரிஷாத் செய்தும் கூட, அங்குள்ள முகாவின் சில கீழ்தரமானோர் இறுதிக் கூட்டத்தில் கல்லெறிந்து- அமைச்சரின் தோள்பட்டையை பதம் பார்த்தனர். அதனால் அவர் பட்ட வேதனைதான் இன்றும் கூட அவர்களின் தேசியப்பட்டியல் ஹக்கீமால் மழுங்கடிக்கப்படுகின்றது என்ற உண்மையை அனைவரும் அறிவர்.

இதே நிலை, சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி கோரிக்கையிலும் வந்துவிடாது அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

இறுதியாக,அட்டாளைச்சேனை மக்களும் சாய்ந்தமருது மக்களும் - அநியாயமாக பாதிக்கப்பட்ட அமைச்சர் றிஷாத்திடம் மன்னிப்பு கோராதவரை அல்லாஹ்வும் மன்னிக்கமாட்டான். உங்கள் ஊர்களின் கனவும் பலிக்கப்போவதுமில்லை.

அட்டாளைச்சனைக்கான தேசியப்பட்டியல், சாய்ந்தமருத்துக்கான உள்ளுராட்சி சபை விடயங்களில் அல்லது காலம் தாழ்த்தப்படுகின்றமைக்கு இவ்விரு ஊர்களினதும் ஜும்மா பள்ளிகளே பொறுப்புக்கூற வேண்டும்.

No comments:

Post a Comment