Monday, November 21, 2016

பெஷன் பக் தீ விபத்திற்கான காரணம் என்ன?


பொரலஸ்கமுவ, பெபிலியான சந்தியில் உள்ள பெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக காரணம் தற்போது வரையில் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது வரையில் இடம்பெற்றுள்ள விசாரணைகளின் அடிப்படையில் குறித்த ஆடைக்களஞ்சியத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீப்பரவலுக்கு காரணம் என கூறப்படுகின்றது.

குறித்த தீ விபத்தில் ஆடைக் களஞ்சியத்தின் முதன்மை அலுவலகம் மற்றும் பிரமாண்ட காட்சியறை என்பன தீக்கிரையாகியிருந்தது.

களஞ்சியசாலையில் பரவிய தீ குறித்து, மின் பொறியியலாளர் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர்களது பரிசோதனை அறிக்கைகள் இன்று பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளன.

தீ குறித்த பரிசோதனைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.

தீப்பிடிக்க காரணமாக இருந்தவை குறித்து உயர் தொழில்நுட்பம் முறைமைகளை கொண்டு சோதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

சோதனைகளுக்காக ஆடையக வளாகத்திலுள்ள சிசிரிவி காணொளிகளும் சோதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தீவிபத்தின் காரணமாக 30 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment