Monday, January 29, 2018

அட்டாளைச்சேனை மக்களே நம்பாதீர்! பெப்ரவரி 22 இல்தான் பாராளுமன்றம் !! அம்பலமானது ஹக்கிமின் கபட நாடகம்!!!




(ஏ.எச்.எம்.பூமுதீன்)

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரத்தில் மீண்டும் அம்மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தை மு.கா,தலைவர் ரவூப் ஹக்கீம் கையில் எடுத்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

தேசியப்பட்டியல் எம்.பியாக இருந்த சல்மானை இராஜினாமா செய்யவைத்த ஹக்கீம், அட்டாளைச்சேனை நஸீரை எம்.பியாக்கியுள்ளதாக அறிவித்து, அதற்கான உத்தரவாத ஆவணத்தை கையளிக்கும் புகைப்படத்தையும் பிரசுரித்திருந்தார். மட்டுமன்றி , நஸீரும் தன்பாட்டுக்கு அந்த ஆவணத்தை ஐ.தே,க. பொதுச் செயலாளர் கபீர் காசிமிடம் கையளிக்கும் புகைப்படத்தையும் பிரசுரித்திருந்தார்.

இந்த நிகழ்வுகளையெல்லாம் நம்பிய, இப்போதும் நம்பிக் கொண்டிருக்கின்ற அட்டாளைச்சேனை மு,கா போராளிகள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர், மூழ்கின்றனர்.

ஆனால், அவை அத்தனையுமே பொய் என்ற தகவல் தற்போது கசியத் தொடங்கியுள்ளது.

பெப்ரவரி 10 இல் நடைபெறவிருக்கும் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபையை கைப்பற்றுவதற்கான ஹக்கீமின் நாடகம் தான் அது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாராளுமன்றில் - நஸீர் சத்தியப்பிரமானம் செய்யாத வரையில் - வழங்கப்பட்ட அல்லது கைமாறப்பட்ட ஆவணங்கள் அணைத்துமே செல்லுபடியற்றது அல்லது ஏமாற்றுக்கான தந்திரோபாயமே அன்றி வேறில்லை.

தேர்தல் முடிந்ததன் பிற்பாடுதான் அதாவது, பெப்ரவரி 22 இல்தான் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு  இடம்பெறவுள்ளது. அன்றுதான் நஸீர் எம்பீயாக சத்தியப்பிரமானம் செய்ய முடியும்.

 அதனால்தான் கூறுகின்றோம் அட்டாள்ச்சானை பிரதேச சபையை கைப்பற்றுவதற்காக ஹக்கீம் எடுத்துக் கொண்ட இறுதி துரும்பு இந்த தேசியப்பட்டியல் விவகாரமாகும் என்று.

பெப்ரவரி 8 இல் பாராளுமன்றை கூட்டுமாறு பிரதமர் தற்போது சபாநாயகரை கோரியுள்ளார்.ஆனால் அதற்கு தேர்தல் ஆண்க்குழு தலைவர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதுடன், தேர்தலை 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பேன் என்றும் எச்சரித்துள்ளார். இதற்கு காரணம், தேர்தல் பிரசாரம் பெப்ரவரி 7 நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளமையாகும். 

இவ்வாறான நிலையில் , எவ்வாறு நஸீர் எம்பியாகும் விடயத்தை அட்டாளைச்சேனை மக்கள் நம்பீக்கை கொள்ளப்போகின்றனர்? கொஞ்ஞம் சிந்தியுங்கள்.

அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றப்போகின்றோம் என்பது ஹக்கீமுக்கும் தெரியும்- அந்த மக்கள் ஏமாற்றப்படப்போகின்றார்கள் என்று நஸீருக்கும் தெரியும். மிகத் தெளிவான நாடகமொன்று இன்று அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் விவகாரத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. பிரதேச சபையை கைப்பற்றுவதற்காக ஹக்கீமும் நஸீரும் இணைந்து நடத்தும் நாடகம் இது.

அட்டாளைச்சேனை மக்களே ஏமாறாதீர்கள், விழிப்பாக இருங்கள் ...

No comments:

Post a Comment