Wednesday, January 10, 2018

அமைச்சர் றிஷாத் யானைக்கு வாக்களிக்க கூடாது என்றாரா?



இன்றைய வீரகேசரி பத்திரிகையில் " யானைக்கு அளிக்கும் வாக்குகள், எமது சமூகத்தை அடிமையாக்கும் " என்ற தலைப்பில், அமைச்சர் றிஷாத் சம்மாந்துறையில் பேசிய உரையின் சுருக்கம் வெளியாகியுள்ளது.

தலைப்பை பார்த்து விமர்சனம் செய்வது அறிவுடமையாகாது. தலைப்பை பார்த்தாலே வாசிக்க தூண்டும் வகையிலேயே தலைப்புக்கள் அமையப்பெறும். அந்த வகையான ஒன்றுதான் இதுவும். அவர்கள் வாசகர்களை மடயனாக்கி தங்களது பத்திரிகையை விளம்பரப்படுத்துவதில் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

உண்மையில் அப் பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதானது, அம்பாறை மாவட்டத்தில் யானைக்கு அளிக்கும் வாக்குகள் எமது சமூகத்தை அடிமையாக்கும் என்பதேயாகும். அவர் மாவட்டத்தின் பெயரை தெளிவாக சுட்டிகாட்டியுள்ளார். அச் செய்தியின் உள்ளடக்கத்தை வாசிப்பவர், அதனை அறிந்துகொள்ள முடியும்.

அவ்வாறு கூறியமைக்கான காரணம் நாம் அறியாததுமல்ல. அம்பாறை மாவட்டத்தில் யானை பெறும் சிலை வைப்பை இன்னும் ஊக்குவிக்குமென சுருங்கக் கூறி விளங்கப்படுத்தலாமென நினைக்கின்றேன்.

இதனை நீண்ட கட்டுரை மூலம் தெளிவாக விளக்க முடியும். இருந்தாலும், நேரம் இடம் கொடுக்கவில்லை. ஒரு பத்திரிகை செய்தியின் தலைப்பை பார்த்து விமர்சிப்பதை போன்ற அறியாமை வேறேதுமிருக்காது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

No comments:

Post a Comment