தென்பகுதியை நேற்றிரவு கலங்கடித்த வெடிப்பும் ஒளிப்பிளம்பும் விண்கல் வெடிப்புச் சத்தமாக இருக்கலாம் எனத் தெரிவிப்பு
தென்பகுதியில் நேற்றிரவு கேட்ட பாரியவெடிப்புச் சத்தம் மற்றும் திடீரெனத்தோன்றிய ஒளிப்பிளம்பினால் மக்கள்மத்தியில் பதற்றமான நிலைகாணப்பட்டது.
நேற்றிரவு 8.45 மணிக்கும் 9 மணிக்கும்இடையில், பெரும் இரைச்சல் மற்றும்வெடிப்புச் சத்தம் கேட்டதுடன், வானத்தில்ஒளிப்பிளம்பும் அவதானிக்கப்பட்டது. மாத்தறை, அக்குரஸ்ஸ, தெனியாய பகுதிமக்கள் இந்த சத்தத்தை கேட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் கரையோரத்தில்வசிக்கும் மக்களில் சிலர், வானத்தில்இருந்து ஒளிப்பிளம்பு தோன்றியதையும்கண்டுள்ளனர்.
தென்மாகாணத்தின் பல பகுதிகளிலும்வசிக்கும் மக்கள், வித்தியாசமானஒளிப்பிளம்பு மற்றும் ஒலியைக்கேட்டதாக முறையிட்டிருப்பதாக அனர்த்தமுகாமைத்துவ நிலைய பேச்சாளர்அத்துல கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மாத்தறை, காலி பகுதிகளில் கடலைஅண்டிய பகுதிகளில் உள்ள மக்கள்சிறிய நில அதிர்வு போன்ற சத்தத்தையும்உணர்ந்துள்ளனர் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
பெரும் இரைச்சலுடன் வெடிப்புச் சத்தம், வானில் காணப்பட்ட ஒளிப்பிளம்பினால்தென்மாகாண மக்கள் நேற்றிரவுபதற்றமாக காணப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது, தென்பகுதி வானில் எந்தவிமானங்களும் பயணம் செய்யவில்லைஎன்று விமானப் போக்குவரத்துஅதிகாரசபையினர்உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டகொழும்பு பல்கலைக்கழக பௌதிகவிஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் சந்தனஜெயரத்ன, விண்கல் ஒன்றினால் ஏற்பட்டவெடிப்புச் சத்தமாக அது இருக்கக் கூடும்என்று தெரிவித்துள்ளார்.
“இதுபோன்ற வெடிப்புகள், ‘நெருப்புப்பந்து வெடிப்பு’ என்றுஅழைக்கப்படுகிறது. விண்கல் பூமியின்வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும்ஏற்படுகிறது.
இந்த விண்கல் 50 செ.மீஅளவுடையதாகஇருக்கலாம். ஒவ்வொரு விண்கல்லும், பூமியின் வளிமண்டலத்துக்குள்செக்கனுக்கு 65 கி.மீ வேகத்தில்பிரவேசிக்கும்.
அதிக வேகத்தினால்வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும், வெப்பத்தினால் வெடித்துச் சிதறும். அதனால் தான் வெடிச்சத்தம் எழுக்கிறது.
வெவ்வேறு நிற ஒளியுடன், விண்கல்நுழைந்ததை மக்கள் பார்த்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பச்சைநிறத்திலும், மஞ்சள் நிறத்திலும்கண்டுள்ளனர்.
இந்த வெடிப்பு சேதங்களை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அதிஸ்டவசமாக, சிறியதுண்டுகளாக உடைந்துள்ளது.
விண்கல்லின் பாகங்களை மக்கள்தொடக் கூடாது. அதில் கதிரியக்கதாக்கங்கள் இருக்கக் கூடும். அதனால்மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படும். இடனந்தெரியாத பக்ரீரியாக்கள் அதில்இருக்கும்.” என்றும் அவர்எச்சரித்துள்ளார்.
அதேவேளை, நேற்றிரவு தோன்றியஒளிப்பிளம்பு பற்றிய எந்தச் சம்பவமும்பதிவாகவில்லை என்று இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடற்படை, விமானப்படைஎன்பனவும், எத்தகைய சம்பவங்களும்இடம்பெறவில்லை என்றும் உறுதிசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment