பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்தே பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்களை இலங்கை தொலைதொடர்புகள் மற்றும் ஒழுக்காற்று ஆணைக்குழு தற்காலிகமாக முடக்கியிருந்தது. 72 மணித்தியாலயங்களுக்கு மட்டுமே இக்கட்டுப்பாடு என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ச்சியாக இவை முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.
சமூக வலைத்தளங்கள் கடந்த சனிக்கிழமை முதல் வழமையாக இயங்கும் என ராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்றையதினம் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இந்தவிடயம் குறித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது குறித்த தடையை நீக்குவதா? அல்லது இன்னும் சில தினங்களுக்கு தடையை நீடிப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment