அமைச்சர் ஹக்கீம் மூதூரில் பேசிய பேச்சுக்களில், மடித்து கட்டிக்கு சண்டைக்கு செல்லப்போவதாக கூறிய கதை, மக்களிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதன் மூலம் மூதூரில், முழுமையாக ஒரு ரௌடியாக மாறிய அமைச்சர் ஹக்கீமை பார்க்க முடிந்தது. இதுவே அவரது அரசியல் அஸ்தமன காலத்தை மக்களுக்கு பறை சாட்டி நிற்கின்றது. இச்செயலானது, அவர் அரசியலில் மிகவும் கீழ்த்தரமான மட்டத்துக்கு இறங்கிவிட்டதை கட்டுகிறது. இது போன்று தான், அமைச்சர் றிஷாதை ஏசிப் பேசுவதற்கென்றே சிலரை மு.காவின் மேடைகளில் ஏறச் செய்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்களாக, அமைச்சர் றிஷாதின் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பா.உ ஹுனைஸ் பாறூக், குவைதிர்கான் ஆகியோரை அவதானிக்க முடிகிறது. இவர்கள் மிகவும் மோசமான விதத்தில் அமைச்சர் றிஷாதை விமர்சிப்பார்கள்.
அமைச்சர் ஹக்கீம் மூதூரில் இப்படி கூறியிருந்தார்
“ என்னைப் பொறுத்தமட்டில் மற்றவர் மீது அவதூறு பேசுவதற்கான கால அவகாசம் எங்களுக்கு கிடையாது. என்னைப் பொறுத்தமட்டில் மு.காவின் ஆதரவாளர்கள்.. கொஞ்ச பேரை ஏசிப்பேசுவதற்கு கொண்டு வந்திருந்தம், இறக்குமதி செய்து கொண்டந்திருந்தம். அவர்கள் அவர்கள் மாவட்டத்தில் இருந்து கொஞ்ச பேர் வந்திருந்தாங்க. அவங்க பேசுவாங்க. முடிஞ்சிடும். தலைமை எல்லா இடங்களிலும் கதைக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எங்கட அந்தஸ்துக்கு ஏற்பத்தான் சிலதை பேச வேண்டும். ”
முதலில் குர்ஆனையும், ஹதீதையும் யாப்பாக கொண்ட மு.காவானது ஏசிப்பெசவென கட்சிக்குள் ஆட்களை வைத்திருக்க வெட்கப்பட வேண்டும். மேலுள்ள அமைச்சர் ஹக்கீமின் பேச்சில், அவர் ஏசிப்பேச கூட்டிக்கு வந்த நபார்களாக் முன்னாள் பா.உ ஹுனைஸ் பாறூக்கையும், குவைதிர்கானையும் தான் குறிப்பிடுகிறார் என்பது சிறு பிள்ளையும் அறிந்த விடயம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் அ.இ.ம.காவுடன் இருந்த காலப்பகுதியில் ஒரு ராஜாவாக இருந்தார். தனது கிராமத்தில் ஒரு கிராமத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இவருக்கு மு.காவில் அமைச்சர் ஹக்கீம் கொடுத்துள்ள அந்தஸ்து, ஏசிப்பெசுவதற்கு பொருத்தமான ஒரு நபர். இதனை விட வேறு யாராலும் இந்தளவு அவமானப்படுத்த முடியாது.
அதில் இவ்வாறு ஏசிப்பேசுபவர்களுக்கென்று ஒரு அந்தஸ்து உள்ளது என குறிப்பிட்டு அமைச்சர் ஹக்கீமே இவர்களை கேவலமாக பேசியுள்ளார். இவர்களை நம்பித் தான், வன்னி மாவட்டத்தில் ஓரிருவார் மு.காவுடன் உள்ளனர். அவர்களை அவமானப்படுத்துவது, வன்னி மக்களையே அவமானப்படுத்துவதற்கு ஈடாகும். இம் மாவட்டத்தில் உள்ள குவைதிர்கான் மிக மோசமாக அமைச்சர் றிஷாதை விமர்சித்து வருகிறார்கள். அவர்களால் அமைச்சர் றிஷாத் மீது முன் வைக்கப்படும் குறித்த விமர்சனங்களை அவதூறு என அமைச்சர் ஹக்கீம் தனது வாயினாலேயே இந்த வீடியோவில் குறிப்பிடுவதை அவதானிக்கலாம். அவதூறு என்பது ஒருவர் ஒரு பொய்யான குற்றச்சாட்டை இன்னுமொருவர் மீது முன் வைப்பதாகும். அமைச்சர் ஹக்கீம் தன்னை அறியாமல், தனது வாயாலே உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
No comments:
Post a Comment