சிறிய ரக தனியார் விமானம் ஒன்று ஈரான் வான் எல்லையில் விபத்துக்கு உள்ளானதில், பிரபல துருக்கிய தொழிலதிபரின் மகள் உட்பட 11 பேர் மரணித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என துர்கிஷ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்துக்கு உள்ளான அந்த விமானத்தில் 11 பேர் இருந்ததாகவும், அதில் மூன்று பேர் விமான ஊழியர்கள் என்றும், 8 பேர் பயணிகள் என்றும் துருக்கிய அதிகாரிகள் கூறினர். மேற்கு இரான் வான் பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பிரபல தொழிலதிபர் ஹூசைன் பஸாரனின் மகள் மினா பஸாரனுக்கு அடுத்த வாரம் திருமணம். இதற்காக தன் தோழிகளுக்கு துபாயில் விருந்து வைத்தார். இவ்விருந்து முடித்து அனைவரும் திரும்பும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது

No comments:
Post a Comment