மார்பு கச்சைகளை காட்டியவாறு ஆடைகளை அணிந்து திரிவதற்கு இந்த நாட்டிலுள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்றால் முகத்தை மூடி ஆடை அணியும் உரிமை எமது பெண்களுக்கும் உண்டு என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜே.வி.பி.யின் பிமல் ரத்நாயக்க எம்.பி.க்கு சபையில் பதில் வழங்கினார்.
பாராளுமன்றத்தில் இன்று -09- வெள்ளிக்கிழமை வணிக கப்பற்தொழில் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது பிமல் ரத்நாயக்க எம்.பி கூறும் போது,
முஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும். தற்போது தமிழர்கள் அடிப்படைவாதத்தை கைவிட்டுள்ளனர். அத்துடன் இந்த களரியிலும் கூட பாடசாலை மாணவிகள் கூட முகத்தை மறைத்து கொண்டு வருகின்றனர். ஆகவே இதனை முஸ்லிம் அமைச்சர் இணைந்து இவ்வாறான அடிப்படைவாதத்தை தடை செய்ய வேண்டும் என்றார்.
இதனையடுத்து முஜிபுர் ரஹ்மான் தனது உரையில் கூறும் போது

No comments:
Post a Comment